இடுகைகள்

2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நம்பிக்கை எனும் வழிகாட்டி

படம்
வழி தெரியாத பாதையில் தன்னந்தனியாய் நான் ! நடக்க ஆரம்பித்த போது பயம் இருந்திருக்கவில்லை களைப்பும் சலிப்பும் தெரியாதிருந்தது ! ஒரு மணி நேரம் பல மணிகளாய் பல்கிப்பெருகி கொண்டே இருக்கிறது! வளைவுகளையும் மேடு பள்ளங்களையும் உணர்ந்து கொண்டே ஊர்ந்து போகிறேன் ! அப்பப்போ வந்து போகும் வழிபோக்கர்கள் மேகம் சேரும்போது  வரும் மழையாய் வந்து  சூரியக்கதிர்களோடு சேர்ந்து ஓடிவிடும் நீராவியாய் கரைந்து மறைந்து போவதாய் பட்டது ! திடீரென்று, எங்கு போகிறேன் என்ற கேள்வி விடை தெரியாத ஒன்றாய் மாறி என்னை பார்த்து இளித்தது ! எதிர் சிரிப்பு சிரிக்க நினைக்கையில் நிஜத்திலேயே விடை விட்டுப்போனதை  உணர்ந்து கண்கள் கண்ணீர் துளிகளை அளிக்கிறது ஆபத்பாந்தவனாய்த் தன்னை எண்ணிக்கொண்டு ! இருந்த கொஞ்ச நஞ்ச ஒளியும் இருளோடு இணைந்து இருள் குழந்தைகளை மட்டுமே படைதளித்துக் கொண்டிருப்பதாய் பட்டது! பயணம் முடிவதற்கு முன் நான் முடிந்து விடுவேனோ என்றெண்ணி எனது விழிகள் தேடுதல் வேட்டை நடத்த வழிகாட்டியாய் வந்த ஒரு ஒளிக்கீற்று ...

ஏமாற்றும் மனம்~

அடிக்கடி கண்ணில் பட்ட போது அட சே என்ன இது தொந்தரவு என்றெண்ணத்  தோன்றியது! இப்போது காணாமலே போனதும் மனம் அதையே தேடுகிறது!

சொன்னதை கேட்கும் மனம்

கூடாது கூடாது என்று சொன்னால்தான் நினைப்பேன் நினைப்பேன் என்று சொல்லாமல் சொல்லி அடம்பிடிக்குது  ! விட்டு விடு விட்டு விடு என்று பலமுறை கூறி விட்டேன் கேட்டுகொண்டதாய் தெரியவில்லை ! திரும்பி திரும்பி பார்க்காதே ஒன்றும் வேலைக்காகாது என்றேன் கண்கள் முன் நோக்கவில்லை ! சரி போனால் போகிறது இந்த ஒரு முறை மட்டும் என்றபடி 10 ரூபாயை எடுத்து கொடுத்து வங்கிக்கோ  ஐஸ் கிரீம் என்றதும் மனம் நான் சொன்னதை கேட்டு நடந்ததாய் தோன்றியது !!

காரணம் இல்லாத உணர்வுகள்

பார்ப்பது கிடையாது அடிக்கடி, பார்த்தாலும் பேசுவதை எண்ணி விடலாம் விரல் விட்டு ! யாரும் கந்தஷஷ்டி கவசம் போல ஒவ்வொரு காலையும் புராணங்கள் சொல்வதில்லை வீர செயல்கள் இவை என்று! எனக்கெனச் செய்த உதவிகள் முட்டை வடிவத்தையே காட்டச் செய்தன! இருந்தாலும் எனக்கு இவ்வளோ பிடிக்கும் எனச் சொல்ல தூண்டுது குழந்தை மனது!

கோணம்

என்னை பார்த்து நிறைய பேர் பயப்படுகிறார்கள் தன் மிக அருகில் வந்து விட்டு நகர்ந்து வளைந்து போய் விட்ட எறும்பு கூட்டத்தை பார்த்து சொன்னதாம் புலியை காணாத செம்மறி ஆடு !

Poetry Competetion and How I became a Cindrella!

It was my first poetry competition, that was held in my office. They gave the topic as "Rain". But there were no thoughts pouring like rain. Finally got a thread, out of which the poetry came out. Here is the poem/rhyme/lyrics, whatever it means to you ;) Rain That was a rainy day, Towards the school, on my way! Met a plant, it just smiled, Too big flower, but not so wild, "Why so happy?", it was me, "Took bath with some fresh water, you see!" That was a calf, I saw jumping, With small happiness, my heart was pumping, "Why so jumpy??",it was me, "Fresh and lively, that's how I feel!" Then, there came a small sparrow, Looked like it had lost the word "sorrow", "Flying with colors??",it was me, "Sprinkles of happiness that hit me!" Look at me, poor little Cindrella, I know, its time to fold my umbrella, That I have now found the prince of happiness, The rai...

Being a Listener or Questioner, Nor Both !!

The guy, who took the seminar was literally begging. "Anybody, please ask questions!!!" "Do you want any clarifications???" "Any queries!!??" There seem to come no response from the audience. He looked at the left hand-side audience and asked, "Anybody,questions???". Everybody were sitting like, "Anybody was screaming here???!!". After getting are-you-talking-to-me kind of response from the left side group, he turned his attention to the right hand-side audience. This time, he did not want to face the same reaction. So, he pointed out some person and asked, "Ask me a question. You must be having lots of questions. ". That guy, who was pointed out, started talking to his neighbor, though he had not talked to him earlier. See, this is the scene which we often watch,on seminar halls and office meetings.This can be called as "Listening Mode" of brain . If you think about it, this is a kind of mode, where onl...

குழப்பத்திலும் கவிதை தோன்றுமா ??

காலையில் ஒரே  மகிழ்ச்சி அருமையான ஒரு கவிதை தோன்றியது சேமித்து வைக்கவில்லை மாலையில் சேர்த்து படைத்து கொள்ளலாம் என்று! மாலை வருவதற்குள் சில பல நிகழ்வுகள் பல  பல விமர்சனங்கள் வாள் சண்டையிட்டு கொண்டிருந்தன பல கேள்விகள் ! சிதைந்து போயிருந்தது  எனது  கவிதை ! எனக்குள் மோதி கொண்டிருந்த கேள்விகள் கொஞ்சம்  கொஞ்சமாய் எனது கவிதையை கிழித்து அழித்து கொண்டிருந்தன ! மிச்சம் இருப்பதையாவது படைப்போம் என்று மனதை தேற்றி கொண்டு  உட்கார்ந்திருந்தேன் மாலையை எதிர்நோக்கி !! அதற்குள் அழிந்து விடுவாயா என் கவிதையே!!

An Experience That Never Helps ~

Anamika had a life-long desire to reach the highest altitude of Anaimudi Hills. After all, she was living right down the hills. But there were lots of barriers. Lots of barriers not on the way to the hill, but were well settled in and around her house. Yes, they were her parents and relatives. Finally, one fine Sunday morning, Anamika decided to go, visit and admire the place, of course, without anybody knowing. It was Sunday. She got up too early as unusual. She got ready with the same speed. It was time to tell the fake reason, she had prepared to go out. Anamika called her mother, "Amma, I am going to my friend's house to prepare for exams! I will be little late!!", and she ran picking up her cycle. Her amma screamed, "Try to finish it soon and come back early.I will make you favorite chicken briyani!", with a mother's usual fear and care. Anamika was on her way to the hill top. She was exploring the beauty of the forest. There were elephant moth...

மௌனமே மொழி ஆதல்!

கருவாய்  உதித்து காலால்  உதைத்து உருண்டு  பிரண்டு வெளியில்  வரும்வரை அவளுக்கும்  எனக்கும்  நடந்த   உணர்வு  பரிமாற்றங்கள் ! திடீரென  கண்ணுக்குள்  ஏதோ  வெள்ளை  பந்து  போல் பாய்ந்து  வந்தது முதல்  முறையாக  அழுகிறேன் ! உள்ளிருந்த  போதும்  அழுதேனோ ?! மௌனம் ! வெதுமையாய் வெள்ளை  துணிக்குள் அவள்  பக்கத்தில்  கிடக்கிறேன்  மௌனமாய்! கண்களில் சிறு  துளி  கண்ணீரோடு மௌனமாய் தடவி  விடுகிறாள் ! என்  ஒவ்வொரு  அசைவையும்  புரிந்து  நிகழ்கிறாள்!  ஸ்பரிசிக்கிறாள்!  சுவாசிக்கிறாள் ! அவளை  சுற்றி  விழுந்த ஆயிரம்  வார்த்தைகளையும்  வெல்ல  கூடியதாய்  உள்ளது எந்தன்  மௌன  மொழி!

துணைவி துணை இன்றி !

தனிமை அவரை வாட்டியிருக்கவில்லை ! விருந்துக்கு அழைத்த தன் பெண் தன்னிடம் பேசாமல் பரபரப்பாய் ஓடிகொண்டிருந்தபோதும் ! ஓரமாய் தான் பாட்டுக்கு உட்கார்ந்து ஒரு தூணை வெறித்து பார்த்த படி பழைய நினைவுகளில் மூழ்கி இருந்தார் ! 50 வருடங்களுக்கு முந்தைய படம் நிழலாய் நினைவுகளில் ! சும்மா காடு வீடு என சுற்றி கொண்டிருந்தவனுக்கு திருமணம் ! என்னதான் எல்லாரிடமும் பயம் இருந்தாலும் தனக்கென வருபவளிடம் மட்டும் வீராப்பு சொல்லித்தராமல் வருவது ! அதை செய்  இதை செய் என்ற அதட்டலோடும்,சில அடி தடியோடும் 2 பிள்ளைகள் ! ஒரு ஆண் ஒரு பெண் ! பெண்ணுக்கு திருமணம் முடித்து புகுந்த வீட்டுக்கு அனுப்பியாயிற்று ! அதட்டல் தொடர்கிறது ! பையனுக்கும் திருமணம் முடித்தாயிற்று ! அதட்டல் விட்டு போகவில்லை ! பேத்தி பேரன்கள் என ஒவ்வொரு பண்டிகையும் ஒரு திருவிழாவாகவே இருந்தது அந்த வீட்டில் ! அன்றும் அதட்டல் தொடர்ந்தது ! ஒரு நாள், அவள்  சொர்கலோகம் பார்க்க வேண்டும் என்ற விடாத ஆசையால் சொல்லாமல் சென்று விட்டாள்  ! அப்பொழுது முதல் எதிர்பார்ப்புகள் எதிர்பார்த்திருக்க படவ...

நீ ஏன் காதலிக்கவில்லை ??

என்னை பார்த்து ஒரு கேள்வி ! நீ ஏன் காதலிக்கவில்லை ?? என் காதல் கதைகளை தான் கேளுங்களேன் ! அந்தி மாலை வேளையில் செவ்வானத்துக்குள் சென்று சூரியன் ஒளிந்துகொள்ள அவனை துரத்திய படியே கரு நீல வானத்தில் வெள்ளை பந்தாய் திரியும் வெண்ணிலவு என் முதல் காதல் ! திருட்டு பூனை என்ற புனை பெயர் இருந்தாலும் எங்கள் வீட்டு பூனை சர்க்கரை கற்கண்டு ! கூப்பிட்ட உடன் ஓடி வந்து எட்டி பார்க்கும் என் கிளீஸ் குட்டி எனக்கு இரண்டாவது காதல் ! செடி வளர்ந்து பூ விரியும் நேரம் வசந்த காலமே வாழ்கையில் வந்தது போன்ற மகிழ்ச்சி ! ரொம்ப நாளாய் ஆசை பட்டு தண்ணீர் பாட்டிலில் வீடு கட்டி ரகசியமாக தங்கவைத்துள்ள  டேபிள் ரோஜா செடி என் மூன்றாவது காதல் ! தனியாய் இருக்கும் நேரங்களில் அவன் தான் எனக்கு ஆறுதல் ! அவனை எடுத்து நளினமாய் நாலு கிறுக்கல் கிறுக்கினால் குழப்பங்கள் காணமல் போகும் கலர் கலராய் கனவுகள் வந்து ஒட்டி கொள்ளும் ! எனது பெயிண்ட் டப்பா தான் என் அடுத்த காதல் ! ஹச்சிகோ-வையும் மைலோ-வையும் பார்க்கும் போதெல்லாம் எனக்குள் ஏக்கம் ! என்னை விடாது தொரத்தும் கண்கள் மின்ன என்னை பார்த்து வாலாட்டி வரும் ஒரு...

அம்மாஞ்சி Professor -உம் Project Spectacles-உம் !

Project Spectacles- ஐ  பற்றி கேள்வி பட்டவுடன் முடிவு செய்து விட்டேன், மார்க்கெட்- க்கு வந்ததும் முதல் ஆளாய் போய் வாங்கி உபயோகித்து பார்த்து விட  வேண்டும் என்று. ஊர் பூராமும் அதை பற்றி தான் பேச்சு. "அது  ரொம்ப  stylish ஆக இருக்குதாமா டா" "ஆமா  டா.. அதே  சமயம் நம்ம கண்ணாடி போட்டிருந்தாலும் easy ஆக use பண்ணிக்கலாமா மச்சி" "எங்க இருந்தாலும் நம்ம காதலிய மிஸ் பண்ணாம பேசிட்டே, பாத்துட்டே இருக்கலாம் டா  " "சாத்துடா  அவன.. அடங்கவே மாட்டானா ??!" காலேஜ்-குள்ள   enter  ஆனதும்  காதில்  விழும்  முதல் பேச்சு இப்படி  தான். நான் எடுக்கிற  கிளாஸ்-அ  கவனிக்ரான்களோ இல்லயோ  , Project Spectacles அ  பத்தி பேசிட்டே  இருக்கானுங்க  இந்த பசங்க  ! இந்த பொண்ணுங்களாவது படிப்ப பத்தி பேசுவாங்கன்னு paaththa , anga library ல ukkanthu   "aeii, இந்த கண்ணாடி super dee.. நம்ம ஆள thontharavu pan...

நான் அவனை ரசித்து கொண்டிருந்தேன்!

நான் அவனை ரசித்து கொண்டிருந்தேன்! கண்களை உருட்டி  பார்க்கிறான்! கீழே குனிந்து மர்மப்புன்னகை புரிகிறான்! திடீரென கண்ணடிக்கிறான் ! எழுந்து துள்ளி குதித்து பின் மீண்டும் அமர்கிறான் ! வாயை குவித்து ஆச்சரிய பாவனை செய்கிறான்! கையை நீட்டி நீட்டி ஆனந்த சிரிப்பை உதிர்கிறான் !  கண்களை விரித்து உலகம் அனைத்தையும் உள்ளே அழைக்கிறான்!  கார்ட்டூன் நெட்வொர்க்-இல்  டாம் அண்ட் ஜெர்ரி பார்த்து கொண்டிருந்த பக்கத்துக்கு வீட்டு சிறுவன் ! 

இன்றைய பேருந்து பயணங்கள் !

இன்றெல்லாம் பேருந்தில் செல்லும் போது ஜன்னலோர காட்சிகளை விட கண்கள் மூடி காணும் கனவு காட்சிகளே பிடிக்கிறது ! ஒரு வேளை பக்கத்துக்கு இருக்கை கதைகளை காதுக்குள் விழாமல் தடுத்து நிறுத்தும் மியூசிக் பிளேயர் காரணமாய் இருக்குமோ?  

விழுந்தேன் ! எழுந்திட வியந்தேன் !

நேற்று பார்த்த படமொன்றில் கத்தியை உள் வாங்கியபடியே உயிரை வெளியே விட்டு கொண்டிருந்த தம்பியை திரும்ப அழைக்க போராடிய அண்ணனை பார்த்த போது இறப்பு என்னை பயமுறுத்தியது ! அறுந்து போன செருப்பு பேருந்து நிறுத்தத்தில் செருப்பு தைப்பர்! அந்த தள்ளாத வயதில் நிழலில்லாத மரத்தடியில் அவர் செருப்பை குத்திய போது முதுமை என்னை ஈட்டி போல் தாக்கியது ! தாக்குதல்களோடு போன நான் தோழிகளால் தாக்க பட்டேன்! அரசியலும் சினிமாவும் அறை பட அரை மணி நேரம் வேடிக்கை முடிந்து கிளம்பும் போதுதான் உணர்ந்தேன் தாக்குதல்கள் தாக்காமலே போயிருந்ததை ! உறவுகளை பொறுத்தே உள்ளம் ! உணர்வுகள் மதிக்கப்பட்டால் இறப்பும் சுலபமானது, நிழலில்லாத மரத்தடி உழைப்பும் இனிமையானதே !        

இனம் புரியாத குழப்பங்கள்

எனக்கு நானே சொல்லி கொள்கிறேன் என்னோடு பலர் சண்டையிட்டு ஓடி செல்லும் போது தேவை இல்லை யாரும் என்று என் குணம் இது தான் என்று புரிந்து கொள்ளாதவர்கள் வேண்டாம் என்று என் இதயம் கண்ணீர் சிந்துவதல்ல வீரம் செரிந்தது என்று   இருந்தாலும் இனம் புரியாத குழப்பம் ஒன்று மூளையை குடைந்தெடுத்து இதயத்தில் வலி ஏற்படுத்துவதை தடுக்க முடியவில்லை என்றும் ! 

முடியாத காதல் படிப்போம் நாம் !

ஓரக்கண்ணால் பார்வை உதட்டோரம் ஒரு சிரிப்பு காதல் வந்துருச்சு என்று சொல்லும் ! நாலு நாள் குறுந்தகவல் பரிமாற்றம் அடுத்த நாலு நாள் விடிய விடிய பேச்சு மனசுக்குள்ள எதோ பட்டாம்பூச்சி பறக்கும் ! காதல் வந்தாலே அவன் தமிழ் படத்து  நாயகன் அவள் அதே படத்தில் நாயகி ! கதை அவர்களை விட்டு விலகி போவதே இல்லை ! போனாலும் வில்லனாய் இருக்கும் அப்பா அம்மா தம்பி மாமா மச்சினன் தான் வருவார்கள் ! இவ்வளவு நாள் என்ன செய்யலாம் என்று நினைத்தோம் ? தெரியாது  ! இனி காதல் செய்வோம் ! கனவு காண்போம் ! கண்ணிமை மூடும் நேரம் நீ ! கண் விழித்து பார்த்தல் நீ ! திரைப்படங்கள் வில்லனை ஜெயித்து திருமணத்தில் முடிவது போல திருமணத்துக்கு பிறகு பல நேரங்களில் இக்காதலும் முடிந்து விடுகிறது !  இனியேனும் முடியாத காதல் படிப்போம் நாம் !

குடியரசு தின வாழ்த்துக்கள்!!

ஆஹா நாளை குடியரசு தினம் ! எல்லாருக்கும் மனதில் தோன்றுவது  விடுமுறை நாளைக்கு !   ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கவலை ! எப்படி நாளைக்கு பொழுத போக்குவது !  ஒருவன் படம் பாக்க போலாம் என்கிறான்  !  இன்னொருத்தி  ஷாப்பிங்  போகலாம்  என்கிறாள் !  எல்லாரும் மறக்காமல் குறுஞ்செய்தி அனுப்பி கொள்கிறார்கள்   !  குடியரசு தின வாழ்த்துக்கள் என்று ! ஒருவரேனும் இத்தினத்தின் சிறப்பை உணர்கிறார்களா ?!! நாம் ஆள வேண்டிய நாட்டை  அரசியல் என்னும் சாக்கடையை நிரப்பி  ஓரமாய் நின்று வேடிக்கை பார்த்து கொண்டே  வாழ்த்துக்கள் சொல்லி கொள்கிறோம்  நம் நாடு குடியரசு என்று !     வெளி நாட்டு கம்பெனி-கு  வேலை முடிக்க மூளையை கசக்கி பிழிகிறோமே! தேர்தலில் வாக்களிக்கும் போது சிந்திப்போம் !  கேள்வி கேப்போம் !  லஞ்சம் ஒழிப்போம்!  தலைவா என்று ஆளுபவர் காலடியில் விழுந்து கிடக்க வேண்டாம் !  அத்தலைவன் மனதில் பயம் உண்டாக்குவோம் !  நாம் ஆளும் நாடிது என்று நிமிர்ந்து நிற்போம் !  ...

உரையாடல்கள் - நானும் எனது தோழியும் காதலும்

எப்பொழுதும் வெட்டி தனமாக மொக்கை போட்டு கொண்டிருந்தாலும், அப்பப்போ கவிதுவமாயும் பேசி கொள்கிறோம் நானும் எனது தோழியும். இன்று காலை வானொலியில் ஒரு பாடல் ஒலித்தது. எப்பொழுதும் வரிகளை ஆழ்ந்து ஆராய மாட்டேன் நான். இன்று திடீரென காதில் விழுந்த ஒரு வரி அழகாக பட்டது. குறுந்தகவல் உரையாடல் இதோ: தோழி:   காலை வணக்கம் !  நான்:  வணக்கம் ! வணக்கம் ! :) இந்த gap-ல தான் அந்த பாடல் வரி காதினில் விழுந்தது. உடனே அவளிடம் இப்படி சொன்னேன்:  நான் : மச்சி.. ஒரு semma line in a song. காதல் பேசும் உலகினில் தானே பூக்கள் வண்டை வென்றிடுமே. Super la.. B-) தோழி : Hmmmmmm.. என்ன பாட்டு de :)      நான் : அது தெரில de  :-o This line was good.. Some song in fm :D தோழி : ;) ;)  இத்தோடு முடித்து விட்டு வேறு வேலைகளை பார்க்கலானேன். அலுவலகத்தில் கணினியின் முன் எப்பொழுதும் போல பல வலைதளங்களில் ஆராய்ந்து கொண்டிருந்தேன். முகபுத்தகமும் , twitter - உம் தான். ;) திடீரென 'டிக்க்'  என்றொரு சத்தம். வேற எதுவும் இல்லீங்க. என்னுடைய அலை பேசி கு...

Unchangeables And Uncontrollables!

There are some qualities of people which can never be changed or controlled. However you try to control them, they can never be controlled. Lets see what are they. ;) Lie In a classroom, professor was taking class. It was a strict hour. He will send people out even if he sneeze[Who can control if he feels like?!! May be, he can sneeze and he can tell him "Sir I was about to tell you about new offer from Hutch ! :P "] Everybody were sitting still,like in a church during prayers. Suddenly, the professor shouts, "How dare you? How dare you look at the book, when I am taking class?!!".. Mind-voice: "நீங்க நடத்தறது புரிஞ்சுருந்தா book ah ஏன் பாக்க போறேன்??!! :( " Own voice: "Sir, I was making note of the important points you told sir.. Highlighting in the book sir. Exam preparation sir. Its very useful sir!" professor must be really impressed. But, most of them don't get impressed but will send you out of the class [how do they think, you...

It's Another New Year Again-Twenty Twelve!!

I was wondering what is that I am doing every year? What is the difference I have made and I have had? Have I ever made resolutions? Have I ever followed them ? Aiyaa.. Leave it.. Why should we even bother about these when it does not suit us.. Lets go to the story! How I celebrated this year!! :D Indeed, it was not so much fun like last year. Last year, we were a jolly gang of room mates and a few more friends. We made it to Monkey falls as a new year plan. It was really a fun. We were all girls rocking there in the falls. Lotso photo shoots,lotso kalaais, lotso fun! I have never had such a cool new year. I dont think I will ever have it again. I should really thank all those who made it such a wonderfull memory. Come back ! So, how I planned this new and how it ended up??!! Ready to travel with me ?! "Hey,its a new year! Where shall we go? how shall we celebrate?", I was thinking about it even before two weeks from new year. I made lot of plans. I asked my roommate. ...