துணைவி துணை இன்றி !
தனிமை அவரை வாட்டியிருக்கவில்லை !
விருந்துக்கு அழைத்த தன் பெண்
தன்னிடம் பேசாமல் பரபரப்பாய் ஓடிகொண்டிருந்தபோதும் !
ஓரமாய் தான் பாட்டுக்கு உட்கார்ந்து
ஒரு தூணை வெறித்து பார்த்த படி
பழைய நினைவுகளில் மூழ்கி இருந்தார் !
விருந்துக்கு அழைத்த தன் பெண்
தன்னிடம் பேசாமல் பரபரப்பாய் ஓடிகொண்டிருந்தபோதும் !
ஓரமாய் தான் பாட்டுக்கு உட்கார்ந்து
ஒரு தூணை வெறித்து பார்த்த படி
பழைய நினைவுகளில் மூழ்கி இருந்தார் !
50 வருடங்களுக்கு முந்தைய படம்
நிழலாய் நினைவுகளில் !
சும்மா காடு வீடு என சுற்றி கொண்டிருந்தவனுக்கு திருமணம் !
என்னதான் எல்லாரிடமும் பயம் இருந்தாலும்
தனக்கென வருபவளிடம் மட்டும் வீராப்பு
சொல்லித்தராமல் வருவது !
அதை செய் இதை செய்
என்ற அதட்டலோடும்,சில அடி தடியோடும்
2 பிள்ளைகள் ! ஒரு ஆண் ஒரு பெண் !
பெண்ணுக்கு திருமணம் முடித்து
புகுந்த வீட்டுக்கு அனுப்பியாயிற்று !
அதட்டல் தொடர்கிறது !
பையனுக்கும் திருமணம் முடித்தாயிற்று !
அதட்டல் விட்டு போகவில்லை !
பேத்தி பேரன்கள் என ஒவ்வொரு பண்டிகையும்
ஒரு திருவிழாவாகவே இருந்தது அந்த வீட்டில் !
அன்றும் அதட்டல் தொடர்ந்தது !
ஒரு நாள், அவள்
சொர்கலோகம் பார்க்க வேண்டும்
என்ற விடாத ஆசையால்
சொல்லாமல் சென்று விட்டாள் !
அப்பொழுது முதல்
எதிர்பார்ப்புகள் எதிர்பார்த்திருக்க படவில்லை !
தூணும் வெறித்த பார்வையும்
பழைய நினைவுகளுமே
அன்றாடம் பார்க்கும் படமாகி விட்டிருந்தது !
அவர், அதட்டல்களை ரசித்து கொண்டிருந்தார் !
Superb...
பதிலளிநீக்குThank you :)
பதிலளிநீக்குகவிதை நன்றாக உள்ளது. ஆனால் ஆண்களை இப்படி சித்தரிப்பது இந்த காலத்துக்கு பொருந்தாது. இதன் Vice Versa தான் சரியாக இருக்கும்.
பதிலளிநீக்குஇந்த கவிதை இப்போ இருக்கும் தாத்தாக்களை பற்றியதாக இருக்கட்டுமே ! ஆனாலும் அதட்டலை தவிர மற்ற விஷயங்கள் மறுக்க முடியாதுங்கோ ! ;)
பதிலளிநீக்குஇந்த கவிதை ஆண்களை குறை சொல்ல எழுதலை !என்ன தான் சண்டைகள் இருந்தாலும் ஒருவர் இன்றி மற்றொருவர் எவ்வளவு வருதபடுகிறார் என்பதை சொல்ல நினைத்தேன் ;) work-out ஆகலையோ !? :P :P