உரையாடல்கள் - நானும் எனது தோழியும் காதலும்


எப்பொழுதும் வெட்டி தனமாக மொக்கை போட்டு கொண்டிருந்தாலும், அப்பப்போ கவிதுவமாயும் பேசி கொள்கிறோம் நானும் எனது தோழியும். இன்று காலை வானொலியில் ஒரு பாடல் ஒலித்தது. எப்பொழுதும் வரிகளை ஆழ்ந்து ஆராய மாட்டேன் நான். இன்று திடீரென காதில் விழுந்த ஒரு வரி அழகாக பட்டது. குறுந்தகவல் உரையாடல் இதோ:

தோழி:   காலை வணக்கம் ! 

நான்:  வணக்கம் ! வணக்கம் ! :)

இந்த gap-ல தான் அந்த பாடல் வரி காதினில் விழுந்தது. உடனே அவளிடம் இப்படி சொன்னேன்: 

நான் : மச்சி.. ஒரு semma line in a song. காதல் பேசும் உலகினில் தானே பூக்கள் வண்டை வென்றிடுமே. Super la.. B-)

தோழி : Hmmmmmm.. என்ன பாட்டு de :)     

நான் : அது தெரில de  :-o This line was good.. Some song in fm :D

தோழி : ;) ;) 

இத்தோடு முடித்து விட்டு வேறு வேலைகளை பார்க்கலானேன். அலுவலகத்தில் கணினியின் முன் எப்பொழுதும் போல பல வலைதளங்களில் ஆராய்ந்து கொண்டிருந்தேன். முகபுத்தகமும் , twitter - உம் தான். ;)

திடீரென 'டிக்க்'  என்றொரு சத்தம். வேற எதுவும் இல்லீங்க. என்னுடைய அலை பேசி குறுந்தகவல் ஒன்றை சேர்த்திருந்தது. :) அது எனது தோழியிடம் இருந்து தான். ;)

தோழி: காதல் பேசும் உலகில் பூவும் வண்டும் சேர்ந்தல்லவா வாழ வேண்டும் ? #win-win policy# :P

அட  பாவி.. இத அப்பியே விட்டுட்டணுல  நெனச்சேன்.. இது நல்லாருக்கே ! என்று நினைத்த வாறே குஷியானேன், நானும் கொஞ்சம் யோசிக்கலாமே !

இதோ நான்... :D 


நான்: அது கடைசியில் நடக்கலாம்.. பூவை எப்பொழுதும் தோற்கடித்தே பழகி விட்ட வண்டு முதன்முதலாய் பூவை பார்த்து ரசிக்கும் போது தோற்று தானே போகிறது ? 

எப்படி இப்படிலாம் என்று நீங்கள் கதறுவது கேட்கிறது ! எல்லாம் தன்னால் தோன்றுகிறது! 

தோழி: அட பார்ரா.. ;) B-)

அட பார்த்து விட்டு விட்டு விட்டாள் போல என்று, வேலையை பார்க்க ஆரமித்து விட்டேன். மதிய இடைவேளை. திரும்பவும் 'டிக்கக்' என்று எனது மொபைல் என்னை அழைத்தது. திரும்பவும் அவள். ஆவலோடு இப்போ என்ன தோன்றியது இந்த சின்ன பெண்ணுக்கு என்று திறந்து பாத்தேன்.

தோழி: நல்லா  யோசிச்சு பாத்தேன். :) வண்டு பூவை தோற்கடிப்பதாய் நினைத்து உதவி தானே செய்கிறது. மகரந்தசேர்க்கைக்கு! 


அப்டி போடறா அருவாள. நல்ல point !! நான் யோசித்தேன் உணவு உண்டு முடிக்கும் வரை. அலுவலகத்தில் 2 மணிக்கு ஒரு அறிவு ஏற்றுதல் மாற்றுதல் (அதாங்க  KT-Knowledge transfer) மீட்டிங் இருந்ததில் வேறு சிறு பதற்றத்தோடு இருந்தேன். இதை யோசிக்கவா, அதை யோசிக்கவா என்று குழப்பம் ! 

மனம் மீட்டிங் கு போகவில்லை. சரி, இதை முடிப்போம். யோசித்தேன். பின்பு அடித்தேன். அனுப்பினேன் குறுந்தகவலாய்! 

நான்: hmmmmmmm.. அதுவும் சரி தான் :) ;) அனால் பூவை பெண்ணாகவும், வண்டை ஆணாகவும் பார்க்கிற பட்சத்தில், வண்டுகளின் ஆதிக்கத்தில் இருந்து ஒரு வண்டின் அரவணைப்புக்குள் போக வைப்பது அல்லவா இது ! ;) காதல் ! 

தோழி : அப்ப சரி அப்ப சரி மச்சி ! ;) B-)

அவளும் எவ்வளவு நேரம் தான் போராடுவாள். சரி பொழச்சு போ என விட்டு விட்டாள்! 

நான்: shaabba !! எவளோ யோசிக்க வேண்டிதா இருக்கு ;)

escape-uh என்று நான் நினைத்த வேளையில் 'டிக்கக்' என்று சத்தம் ! அட.. போராளி டா! 

தோழி: அப்டியா டி! எதாவது விசேஷமா ? ;) :P :D 

ஆஹா இதுவல்லவா வழிய போய் வம்பில் மாட்டுவது. 

நான் : எதுவும் இல்ல டி :D :D 

தோழி : :D :D 

வெகு நேரம் ஆகி இருந்தது !   'டிக்கக்' ! மறுபடியும் என்னவாக இருக்கும் ? திறந்து பார்த்தேன் ! 
தோழி:  உலகில் உள்ள பெண்களே ! உரைப்பேன் ஒரு பொன் மொழி ! காதல் ஒரு கனவு மாளிகை ! எல்லாம் அங்கு மாயம் தான்! எதுவும் வர்ண ஜாலம் தான்! நம்பாமல் வாழ்வது என்பது நலமே ! 

வேறென்ன சொல்ல !"அறிவேன் நானுமடி !" - என்பதை தவிர !  ;)  :D

கருத்துகள்