இடுகைகள்

2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிரிக்கும் இதழ்கள்

நிதம் பார்க்கும் முகங்களே திரும்பி கொள்ளும்  காலமிது !   என்றேனும்இடைவந்து வழி மறித்து   சிரித்து செல்லும் இதழ்கள் அன்றைய நாளை  வண்ணங்களால் நிரப்பித்தான்  மறைகிறது ! 

காத்திருக்கும் காத்திருத்தல் !

அமெரிக்கா மகனுக்காக தன் வீட்டு திண்ணையில் யாருக்கும் இடம் தராமல் காத்திருக்கும் முதியவள் ! ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு யுகமாகிப் போகும் நொடிகளில் நினைவுகளை வெளிசெல்ல விடாமல் காத்திருக்கும் காதலன் ! படாத பாடு பட்டு எழுதி முடித்த பரிச்சை தரப்போகும் ஆச்சரியங்களுகாக காத்திருக்கும் மாணவி ! கால் கட்டு கை கட்டு என்று எல்லாரும் பறந்தாலும் யுகம் குறைக்கும் தன்னவனுக்காக காத்திருக்கும் இளம்பெண்  ! காலையில் தயிர்சோறு இட்டுவிட்டு எட்டு மணிநேர வேலைக்காக தன்னை வீட்டிலடைத்து சென்றவனுக்காக காத்திருக்கும் நாய்க்குட்டி ! நாள் முழுதும் கதிரால் வாடி எட்டி எட்டி பார்த்து கதிரவனை வர சொல்லி காத்திருக்கும் அல்லி ! இப்படிதான் காத்திருத்தல் பலரிடமும் காத்து கொண்டுள்ளது தன் விடுதலைக்காக !!

இதயம் மூளை என்னும் முரண்கள் !!

இதயம் மூளை என்று  இரண்டு இடங்கள்  எதற்கு ?  இறைவனை பார்த்தால்  கேட்க வேண்டும் ! இதயம் மட்டும் இருந்திருந்தாலே  மகிழ்ச்சி நெகிழ்ச்சி அடைய செய்திருக்கலாம்  நம் எல்லாரையும் ! சாப்பிட 2 ரூபா வேண்டும் என  சாலையில் போகும் பாட்டி கேட்டாள்  இதயம் தந்து விடு என்றது  வலக்கை கொடுத்ததை இடக்கையாய் வந்து  தடுத்துச் சென்றது மூளை !!  பளிச்சென பார்ப்பதை பிடிக்க  நல்லதொரு புகைப்படக்கருவி  வாங்கச் சொன்னது என் மனம் !  மேலும் கீழுமாய் நாலும் ஏழும் என  கணக்கு பார்த்து தடை விதித்தது  அம்மாவின் மூளை !!  எதிரில் போவோரை பார்த்து  புன்னகைத்து நாளை நல்லதாக்கச்  சொல்லுது மனம்   !!  சிரிக்காதே பூச்சாண்டி  பிடித்து கொள்ளும்  பயம் காட்டுது மூளை !  போனால் போகட்டும் - மன்னித்து விடும் மனம் !  அன்று அதை இன்று இதை நாளை எதையோ என  போக விடாமல் இழுக்கும் மூளை !  கடவுளை பார்க்கும் போது  கேட்க வேண்டும்  இதயம் மூளை என  இரண்டு முரண்கள்  எதற்கு என்று ? 

நினைப்பது யாரோ !

விக்கல் எடுக்கிறது எனக்கு ! நேற்று நான் வாங்கிய  100 ரூபா பூவுக்கு  இன்று தன் பிள்ளையிடம் என்னை  பெருமை பேசுகிறாள் பூக்காரி! எனது தாத்தாவின் எண்ண அலைகளில் நான் இன்று ஓடி கொண்டிருந்தேன் முன்னாடி வாங்கி தந்த கண்ணாடியினால் ! தம்பிக்கோ எந்நேரமும் இந்த அக்கா தான் எப்போ லேப்டாப் கிடைக்கும் ! எப்போ கேமரா என்று ஆசையால் ! அம்மாவுக்குள்ளும் நான் தான்  இப்போ ஓடி கொண்டிருந்தது ! சாப்பிட்டேனோ என்னமோ என்பதனால் ! நான் சொன்ன கதைகளையும்  நாங்கள் கதைத்த கதைகளையும் என்னையும் சேர்த்து கனவில் சிரித்தாள் என் அருமை தோழி ! ஆனால், எனக்கு நீ தான் நினைக்க வேண்டும் ! விக்கல் இன்னும் நிற்கவில்லை !

பெண்ணிவள் போர் குணம் படைத்தவள் !

படம்
இவள் செய்த பிழையென்று சொல்வதா ?  பிறர் செய்த சதியென்று  சொல்வதா? இத்திரு நாட்டில் உதித்து விட்டாள் ! போர் குணம் படைத்த இவள் ! பிறந்த நாளன்று முகம் கூட பார்க்காமல்  தூக்கி வீசிய அப்பன்  கண் விழித்து  தன் உயிர் காணாது  பிதற்றிய அவள் அன்னை  இவள் செய்த பிழையென்று சொல்வதா ?  பிறர் செய்த சதியென்று  சொல்வதா? இத்திரு நாட்டில் உதித்து விட்டாள் ! போர் குணம் படைத்த இவள் ! இதழ் விரிக்கவும் இல்லை  இந்த இளம் பூ மொட்டு ! கண்ணடிகளால் கருகி தான் விடுவாளோ ? வீரி இவள் சாட்டை சொடுக்கி  விரட்டி விட்டாள் அவர்களது   கண் பிடுங்கி ! இவள் செய்த பிழையென்று சொல்வதா ?  பிறர் செய்த சதியென்று  சொல்வதா? இத்திரு நாட்டில் உதித்து விட்டாள் ! போர் குணம் படைத்த இவள் ! தன் கையே தனக்குதவியை தாண்டி  பிறருக்கும் உதவி என்பாள் இவள் ! பெருக்கெடுக்கும் பொறாமை ! பெண்ணிவள் எனக்கு மேலா ? நசுக்கு அவளை  நச்சுப் பாம்புகள் சுற்றி வளைக்கும்! வெட்டி வீசி விரைந்து செல்வாள் ! இவள் செய்த பிழையென்று சொல்வதா ?  பிறர் செய்த சதியென்று  சொல்வதா? இத்திரு நாட்டில்

காதல் - கருப்பா, சிவப்பா?

படம்
காதலா? அது எப்படி இருக்கும் ? கருப்பா ? சிவப்பா ? ஏதோ புனிதமானதாமே ? வயிற்றுக்கும் தொண்டைக்குமாய் உருளை உருளுமாமே ? கனவுக்குள் மிதக்க வைக்குமாமே ? காணும் கல்லிளெல்லாம் கலை உருகுமாமே? கேட்கும் ஒலியெல்லாம் இசையாய் ஜொலிக்குமாமே? பாடல்கள் ஆக்கப்பட்டதே  தனக்காய்த் தோன்றுமாமே ? அப்பாவின் திட்டுகள் தாலாட்டுகள் ஆகுமாமே? என்னமோ, என்னைத் தூக்கிக் கொஞ்சும் போதெல்லாம் இந்த அக்காள் பேசிச்சொல்கிறாள்! எனக்கு ஒன்றும் புலப்படுவதில்லை!

நண்பன்டா !

படம்
தோழர்கள் கட்சிக்குள் அடிமட்ட தொண்டனாய் நுழைந்து ரகசியங்கள் முதன் முதலாய் உன்னிடம் பிரசுரிக்க படும்போது நீ "நண்பன்டா " ஆகிறாய் !!