இடுகைகள்

கவிதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாம்பல் உணர்வுகள்

குட்டிப் பாப்பா! புடிக்கலையா அழுதுடும் புடிச்சதுனா சிரிச்சிரும்! கருப்பு வெள்ளை தான் தெரிஞ்ச உணர்வுகளின் வண்ணம்.. நான் நினைத்துப் பார்க்கிறேன்! ரொம்ப புடிக்கும் கொஞ்சம் புடிக்கும் புடிக்காது, ஆனா பரவாயில்லை புடிக்காது சுத்தமா புடிக்காது தாங்க முடியாது அழுகை முட்டும் பல சாம்பல் நிற உணர்வுகள் தான் மிஞ்சி இருக்கின்றன! கருப்பும் வெள்ளையும் காணாமல் போனது எப்போதோ?

Solo Travel

I did not realize the traffic! I took an auto, to office today. I did not realize the traffic As my thoughts were traveling faster than the auto Back and forth Between one action to the other, to the other Wondering, where it all went wrong?! Will they find the answer? Before I reach my destination!

அழுதல்!

தாங்க முடியாத விடயம் நடந்து விட்டிருந்தது! அழாதே! கூடவே கூடாது! பல சாலிகள் அழுவதில்லை! பரவாயில்லை! சரியாகிவிடும்! கடந்து போய் மற்ற வேலைகள் நடக்கலாயின! யோசனைகள் நினைவுகள் பல வேலை என நாளும் முடிந்தது ! இரவு பத்து மணி ! கொடியில் காயப்போட வேண்டிய ஈரத்துக்கு மாறியது தலையணை ! பல இதயங்களில் இல்லாத அதே ஈரம்? ஹும்! விடிந்தது! ஆம்! சரியாகிவிடும்! எனது பலம் கூடியிருந்தது !

சோகம் தீர்த்தல்!

ஆழ்ந்த சோகம் ! எழுதித் தீர்க்கலாம் என பேனாவும் காகிதமுமாய் தயாராகிறேன்! பேனா எழுத ஆரம்பிப்பதற்குள் கண்ணீர் அது முந்திக் கொண்டது ஈரமான காகிதம்! ஈரமான கண்கள்! யோசிக்கிறேன் எதற்கு இந்த சோகம்? எழுத வரவில்லை எதுவும்! திரும்ப யோசிக்கிறேன் யாரைக் குறை சொல்லலாம்? யார் யாரோ உன்னை சோகப்படுத்தினார்களோ? கேட்டுக் கொண்டேன் பதில் கிடைக்காமல்! சில நேரங்களில் சில மனிதர்கள் நினைத்துக் கொண்டேன்! பேனா எழுதியது 'வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகுமாம்' காகிதத்தின் ஈரம் காய்ந்திருந்தது!!

சரியும் தவறும்!!

சரியும் தவறும் சரியுமாய் தவறுமாயே தெரிவதில்லை எல்லாருக்கும் !! எனக்கு இக்கறை  பச்சை என்பேன் !! உனக்கு அக்கறை பச்சை என்பாய் !! நாளைக்கு நானும் அக்கறையே பச்சை எனலாம் !! பூனையை கடிச்ச நாய் தான் தப்பு பூனை நாயை சீண்டியது தெரியும் வரை !! மறைக்கப் பட்ட உண்மைகள் மறக்கப்படாமல் இருக்கும் வரை இன்று சரியாய் இருப்பது நாளை தவறாகலாம் ! இன்று தவறாக்கப்பட்டது நாளை சரியாகலாம் ! சரிக்கும் தவறுக்கும் உள்ள மயிரிழை அளவு இடைவெளியில் தான் பல உறவுகள் ஊசலாடி கொண்டிருகின்றன !! பிடித்து கொள்வோமா விழுந்து செல்வோமா  என  !! இவை யாவும் இறுதி வரை புரியாமல் கரைந்து போகும் புதிராயும் மறையலாம் !!

முகமூடி விலை குறைவா?

முன் சிரித்துப் பின் பதுங்கும் முகமூடி மனிதர்கள் பல பேரை காண்கிறேன் நான்! நண்பனாம் தோழியாம் சொல்லி சொல்லி மகிழ்கிறார் அழ ஒரு தோள் வேண்டும் சொல்லாமல் மறைகிறார்! கூடத்தான் நடந்தார்கள் இக்காட்டுவழி பாதை தனில் கண் முழித்துத் தேடிப்பார்த்தேன் கானல் போன்ற கனவுலகில்! விளிக்கிறேன் விழிக்கிறேன் பின்பு ஒருக்களித்து படுக்கிறேன் முகமூடி விலை வெகு குறைவு போலும் என்றெண்ணியபடி! என் வசமும் ஒன்றிருந்ததைத்தான் முறறிலும் மறந்திருந்தேன்!

உரக்க எழுதுவேனா

பேனா மையின் கடைசி துளியால் எனது கதைப் புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் நான் எழுதிய உனது பெயர் உரக்க ஒலிக்கவில்லையா? அது பார்த்திருக்கப்படவேண்டியது! நமது கதையின் பிள்ளையார்சுழி! நீயோ பாராமலே போய்விட்டிருந்தாய்!! நான் எழுத விரும்புகிறேன், முதல் பக்கத்திலிருந்து! நான் நீ நாம் என்ற கதையை! முடிவிலாப் பக்கங்களைக் கொண்ட புதிய புத்தகத்தில்! இம்முறை உரக்க எழுதுவேனா?!

இரு தலைக் கொள்ளி எறும்பு !!

இரண்டில் ஒன்று தொடு - என்று விளையாடி வென்று முடிவெடு  என்றார் சிறுபிள்ளைத்தனமாக !!  ஒன்று தன் மகிழ்ச்சி!!  மற்றொன்று அடுத்தவர்  மகிழ்ச்சி !!  இரண்டுமே மிகத் தேவை! ஆனால்  கொடுக்கப்பட்டது ஒரு வாய்ப்பு !! இப்படித் தான் தவிக்குமோ  இரு தலைக் கொள்ளி எறும்பு ??!!

விளையாட்டும் மறந்தோம்

பிளாஸ்டிக் பந்தோடு கால்ப்பந்து! எங்கள் தெரு பசங்களின் புது விளையாட்டு மோகம் ! எட்டிப் பார்க்கிறேன் நான்! தேங்காய்த் தொட்டி இட்லி மழை முடிந்த மாலைகளில், பட்டென தயாரான வண்டி நுங்கு சாப்பிட்ட வேலைகளில், கிடைத்த இடத்தில் பாண்டியாட்டம் அழகிய கூழாங்கல் பார்த்தால், தேங்காய் மட்டை கிரிக்கெட், நாலு பேர் சேர்ந்தால் நொண்டி, ஏழு பேர் சேர்ந்தால் கண்ணாம்பூச்சி! வேறு ?? அப்புறம்?? என்னவெல்லாம் செய்தேன்?? எனது பால்ய காலம் அத்தனையும் என் நினைவில் இருக்கவில்லை! நான் கால்ப்பந்தை ரசிக்க ஆரம்பித்திருந்தேன்!!

நான் காணாத நீ !!

உன் சிரிப்பு தான் முதல் அறிமுகம் எனக்கு! நிறைய உரையாடல்கள், காலத்தோடு கிடைத்த உதவிகள், அதட்டலோடு ஆறுதல்கள், பிடித்தவை பரிமாற்றங்கள், இன்னும் மாறிப்போகாதிருந்த அதே சிரிப்பு ! இவற்றிற்கும் அப்பாற்பட்ட ஒரு நீ இருப்பதாய்ப் பயக்கிறேன்! நான் பயக்கும் உன்னை நான் காண்பதற்குள் நான் கண்டிருந்த நல்லவனாகவே நீ காணாமல்  போய்விடு !!

நான் கிடைப்பேனா??

பலப்பல நாட்கள் இங்கே! முடிந்து போக வேண்டாத சிறிய நாள் இரவும் உறக்கமும் தேடியபடியோடிய மிக நீளமான நாள் கண்ணிமை மூடித் திறந்தது  போல் மாயமாய்ப் போன நாள் யாரையோ எண்ணியபடி பகல்க்கனவாய் கரைந்த  நாள் அம்மாவிடம் கோப்பட்டு குழம்பித் தவித்த நாள் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தபடி பாடல்களுள் தொலைந்த நாள் அதே நாட்களைத்தான் கடந்து நடக்கிறேன் இன்றும் என்னைத் தேடிக்கொண்டே  !!

சொல்லப்படாத கதைகள்

பார்த்த நொடியே கண்கள் படபடக்கும் இதயம் தடதடக்கும் எல்லாம் மாயமாகும் ஆனால், என்னைத் துப்பிவிடு எனத் தொண்டைக் குழி வரை படு வேகமாய் வரும் வார்த்தைகள் சொல்லப்படாத கதைகளாய் மடிந்தே போகின்றன இன்றும்!!

நான் ! அவன் !! பயம் !!!

படம்
நான்  ரசிக்கிற  கவிதைகள் நான்  பிடிக்கிற  புகைப்படங்கள் நான்  வியக்கிற  மனிதர்கள் நான்  பார்த்ததும்  புன்னகை  தரும்  நாய்க்குட்டி நான்  கண்ணடிக்கும்   குட்டி  பாப்பா நான்  ஆடும்  ஆடல்கள் நான்  பாடும்  பாடல்கள் நான்  தீர்க்கும்  புதிர்கள் நான்  படிக்கும்  புத்தகங்கள் நான் தீட்டும்  காகிதச் சித்திரங்கள் நான் பார்த்து பார்த்து   சிரித்து ரசிக்கும் திரைச் சித்திரங்கள் நான் கட்டிய மணல் வீடுகள் , காகிதக் கப்பல்கள் நான்  நடந்து  மகிழ்ந்த  வயல்கள் இப்படி எனக்குப்  பிடிக்கும்  என்ற  இவைதான் நான்  ! அதற்காகத்தான்  கேட்கிறேன், நான்-அற்றவனை  கண்டால்  பயப்படுவேனோ  மாட்டேனோ ??!!

The moon and The cloud !!!

There is no moon in my sky Not even a single star that shine I see the clouds, hiding the way Perhaps, I should look for a silver lining and a ray?! My eyes never misses a stare To look at that tiny little white glare Peeking out the array of clouds There, I see the moon, bright and round!! Is it the moon, that's roaming around Or the clouds ?!! And they say, Every cloud has a silver lining !!!

தொலைதல் சுகமாவது எப்போது ?

படம்
போரும்  காதலும் பெண்டிர்  போற்றும்  ஆண்களும் ஆண்கள்  மதிக்கும்  பெண்டிரும் சமயோசிதமும் சன்றான்மையும் வீரமும் சுற்றித்  திரியும் வரலாற்று உலகுக்குள் ! அண்டாகாகசம்   அபுகாகசமும் மந்திரக்கோல்களும் மறைந்து  தோன்றும் மாயாவிகளும் தீயைக்   கக்கும் டிராகன்களும் நடக்கும்  மரங்களும் பேசும்  செடிகளும் மயக்கும் மாய  உலகுக்குள்  ! h + h + o நீரென  மாறியும் மின்னியல்  காந்தவியல் தினச்  செய்தியாகவும் இருப்பிடம்  ஆய்வுக்   கூடமெனவும் வேற்று  கிரகமும் விந்தை  மனிதர்களும் நண்பர்கலெனத் தோன்றும் அறிவியல்  உலகுக்குள்  ! பட்டாம்பூச்சிகளும் நீயும்  மட்டும்  இருக்க மகிழ்ச்சி  விட்டுப்போகாத என்  கனவு  உலகத்துக்குள்  !! இப்படித்   தொலைந்து  போகத்தான் எத்தனை உலகங்களை ஸ்ரிஷ்டிக்கிறது மனது  !!

மழை வேடிக்கை!!

படம்
கண்ணாடிக் காட்சிகளை மறைத்து கண்ணாடியை ரசிக்க  வைக்கும்  முத்துக்கள்! தூரத்து வானம் தூக்கியெறிய தரை விழுந்துமறையும் அழகிய  கோலங்கள்! வாடிப் போய்க் கிடக்கும்  வெண் அல்லி மலரிடம் காதலோடு பல  தீண்டல்கள்! தனக்கஞ்சிப்  பலர் மறைத்தெடுத்து  விரித்த ஆயுதமாம் குடையிடம்  மோதல்கள்! இப்படியாய்  வெயில் பேசாத பல கதைகளைக் காட்டிச் சிணுங்கும்  வான் மழை!

பயமும் கண்ணாம்பூச்சியும்

படம்
பயம் ஒரு ஒற்றுண்ணி! குற்றுயிரும் குலையுயிருமாய் கூடவேதான் சுற்றுவான் அவன்! அவனுக்கு சோறு போடவே சில மனிதர் உண்டு ! அவரிடத்தில் மட்டும் செல்லம் கொஞ்சிப் பெருத்தாடுவான்! மற்றவரிடத்தில்  அவனை  மறந்தும் ஒளித்தும், கராத்தேயும் குங்ஃபூவும் தெரியாத போதும் தைரியசாலியாகவே  நாம் வாழ்கிறோம் !

சொர்க்கமா? நரகமா?

அவன் செத்து விட்டிருந்தான் ! அவன் ஆவி அந்தரத்தில் பாலே ஆடிக் கொண்டிருந்தது ! பார்த்தான் அவன்.. துரத்தி அமுக்கி பிடித்து பின் வாசல் வழியாக செலுத்தி விட்டான் இழவு வீட்டுக்குள் ! அது திரும்பி வரும் ! வந்து அவனிடம் சொல்லும், அவன்  நல்லவனா ? கெட்டவனா ? செல்லப் போவது  சொர்க்கமா? நரகமா ? என்பதை !!!

சிரிக்கும் இதழ்கள்

நிதம் பார்க்கும் முகங்களே திரும்பி கொள்ளும்  காலமிது !   என்றேனும்இடைவந்து வழி மறித்து   சிரித்து செல்லும் இதழ்கள் அன்றைய நாளை  வண்ணங்களால் நிரப்பித்தான்  மறைகிறது ! 

காத்திருக்கும் காத்திருத்தல் !

அமெரிக்கா மகனுக்காக தன் வீட்டு திண்ணையில் யாருக்கும் இடம் தராமல் காத்திருக்கும் முதியவள் ! ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு யுகமாகிப் போகும் நொடிகளில் நினைவுகளை வெளிசெல்ல விடாமல் காத்திருக்கும் காதலன் ! படாத பாடு பட்டு எழுதி முடித்த பரிச்சை தரப்போகும் ஆச்சரியங்களுகாக காத்திருக்கும் மாணவி ! கால் கட்டு கை கட்டு என்று எல்லாரும் பறந்தாலும் யுகம் குறைக்கும் தன்னவனுக்காக காத்திருக்கும் இளம்பெண்  ! காலையில் தயிர்சோறு இட்டுவிட்டு எட்டு மணிநேர வேலைக்காக தன்னை வீட்டிலடைத்து சென்றவனுக்காக காத்திருக்கும் நாய்க்குட்டி ! நாள் முழுதும் கதிரால் வாடி எட்டி எட்டி பார்த்து கதிரவனை வர சொல்லி காத்திருக்கும் அல்லி ! இப்படிதான் காத்திருத்தல் பலரிடமும் காத்து கொண்டுள்ளது தன் விடுதலைக்காக !!