நம்பிக்கை எனும் வழிகாட்டி
வழி தெரியாத பாதையில்
தன்னந்தனியாய் நான் !
நடக்க ஆரம்பித்த போது
பயம் இருந்திருக்கவில்லை
களைப்பும் சலிப்பும் தெரியாதிருந்தது !
ஒரு மணி நேரம் பல மணிகளாய்
பல்கிப்பெருகி கொண்டே இருக்கிறது!
வளைவுகளையும் மேடு பள்ளங்களையும்
உணர்ந்து கொண்டே ஊர்ந்து போகிறேன் !
அப்பப்போ வந்து போகும் வழிபோக்கர்கள்
மேகம் சேரும்போது வரும் மழையாய் வந்து
சூரியக்கதிர்களோடு சேர்ந்து ஓடிவிடும் நீராவியாய்
கரைந்து மறைந்து போவதாய் பட்டது !
திடீரென்று,
எங்கு போகிறேன் என்ற கேள்வி
விடை தெரியாத ஒன்றாய் மாறி
என்னை பார்த்து இளித்தது !
எதிர் சிரிப்பு சிரிக்க நினைக்கையில்
நிஜத்திலேயே விடை விட்டுப்போனதை உணர்ந்து
கண்கள் கண்ணீர் துளிகளை அளிக்கிறது
ஆபத்பாந்தவனாய்த் தன்னை எண்ணிக்கொண்டு !
இருந்த கொஞ்ச நஞ்ச ஒளியும்
இருளோடு இணைந்து
இருள் குழந்தைகளை மட்டுமே
படைதளித்துக் கொண்டிருப்பதாய் பட்டது!
பயணம் முடிவதற்கு முன்
நான் முடிந்து விடுவேனோ என்றெண்ணி
எனது விழிகள் தேடுதல் வேட்டை நடத்த
வழிகாட்டியாய் வந்த ஒரு ஒளிக்கீற்று
நம்பிக்கை அதன் பெயர் என்றது !
பயணம் முடிந்ததா ?? விடையில்லை !
ஆனால் பயம் மடிந்து போயிருந்தது !
nala irukku :)
பதிலளிநீக்குNandri boss ;)
பதிலளிநீக்குcool, nice :)
பதிலளிநீக்குThanku Vengatesh :)
நீக்குசின்னஞ்சிறிய தெளிவான கவிதை. சொல்ல வந்த செய்தியை வார்த்தைகளின் துணையோடு நிறைவு செய்கிறது. நம்பிக்கை உடையவர்கள் பயம் அற்றவர்கள் என்பது கருத்தொளியாக விளங்குகிறது. சூர்ய. நாகப்பன்
பதிலளிநீக்குநன்றி சூர்யா :)
நீக்குNice
பதிலளிநீக்குDanku :D
நீக்குAwesome..
பதிலளிநீக்கு