நான் அவனை ரசித்து கொண்டிருந்தேன்!

நான் அவனை ரசித்து கொண்டிருந்தேன்!

கண்களை உருட்டி  பார்க்கிறான்!
கீழே குனிந்து மர்மப்புன்னகை புரிகிறான்!
திடீரென கண்ணடிக்கிறான் !
எழுந்து துள்ளி குதித்து
பின் மீண்டும் அமர்கிறான் !
வாயை குவித்து ஆச்சரிய பாவனை செய்கிறான்!
கையை நீட்டி நீட்டி ஆனந்த சிரிப்பை உதிர்கிறான் ! 
கண்களை விரித்து உலகம் அனைத்தையும் உள்ளே அழைக்கிறான்! 

கார்ட்டூன் நெட்வொர்க்-இல்  டாம் அண்ட் ஜெர்ரி
பார்த்து கொண்டிருந்த பக்கத்துக்கு வீட்டு சிறுவன் ! 

கருத்துகள்

கருத்துரையிடுக