இடுகைகள்

poem லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Solo Travel

I did not realize the traffic! I took an auto, to office today. I did not realize the traffic As my thoughts were traveling faster than the auto Back and forth Between one action to the other, to the other Wondering, where it all went wrong?! Will they find the answer? Before I reach my destination!

சரியும் தவறும்!!

சரியும் தவறும் சரியுமாய் தவறுமாயே தெரிவதில்லை எல்லாருக்கும் !! எனக்கு இக்கறை  பச்சை என்பேன் !! உனக்கு அக்கறை பச்சை என்பாய் !! நாளைக்கு நானும் அக்கறையே பச்சை எனலாம் !! பூனையை கடிச்ச நாய் தான் தப்பு பூனை நாயை சீண்டியது தெரியும் வரை !! மறைக்கப் பட்ட உண்மைகள் மறக்கப்படாமல் இருக்கும் வரை இன்று சரியாய் இருப்பது நாளை தவறாகலாம் ! இன்று தவறாக்கப்பட்டது நாளை சரியாகலாம் ! சரிக்கும் தவறுக்கும் உள்ள மயிரிழை அளவு இடைவெளியில் தான் பல உறவுகள் ஊசலாடி கொண்டிருகின்றன !! பிடித்து கொள்வோமா விழுந்து செல்வோமா  என  !! இவை யாவும் இறுதி வரை புரியாமல் கரைந்து போகும் புதிராயும் மறையலாம் !!

The moon and The cloud !!!

There is no moon in my sky Not even a single star that shine I see the clouds, hiding the way Perhaps, I should look for a silver lining and a ray?! My eyes never misses a stare To look at that tiny little white glare Peeking out the array of clouds There, I see the moon, bright and round!! Is it the moon, that's roaming around Or the clouds ?!! And they say, Every cloud has a silver lining !!!

சிரிக்கும் இதழ்கள்

நிதம் பார்க்கும் முகங்களே திரும்பி கொள்ளும்  காலமிது !   என்றேனும்இடைவந்து வழி மறித்து   சிரித்து செல்லும் இதழ்கள் அன்றைய நாளை  வண்ணங்களால் நிரப்பித்தான்  மறைகிறது ! 

நினைப்பது யாரோ !

விக்கல் எடுக்கிறது எனக்கு ! நேற்று நான் வாங்கிய  100 ரூபா பூவுக்கு  இன்று தன் பிள்ளையிடம் என்னை  பெருமை பேசுகிறாள் பூக்காரி! எனது தாத்தாவின் எண்ண அலைகளில் நான் இன்று ஓடி கொண்டிருந்தேன் முன்னாடி வாங்கி தந்த கண்ணாடியினால் ! தம்பிக்கோ எந்நேரமும் இந்த அக்கா தான் எப்போ லேப்டாப் கிடைக்கும் ! எப்போ கேமரா என்று ஆசையால் ! அம்மாவுக்குள்ளும் நான் தான்  இப்போ ஓடி கொண்டிருந்தது ! சாப்பிட்டேனோ என்னமோ என்பதனால் ! நான் சொன்ன கதைகளையும்  நாங்கள் கதைத்த கதைகளையும் என்னையும் சேர்த்து கனவில் சிரித்தாள் என் அருமை தோழி ! ஆனால், எனக்கு நீ தான் நினைக்க வேண்டும் ! விக்கல் இன்னும் நிற்கவில்லை !

பெண்ணிவள் போர் குணம் படைத்தவள் !

படம்
இவள் செய்த பிழையென்று சொல்வதா ?  பிறர் செய்த சதியென்று  சொல்வதா? இத்திரு நாட்டில் உதித்து விட்டாள் ! போர் குணம் படைத்த இவள் ! பிறந்த நாளன்று முகம் கூட பார்க்காமல்  தூக்கி வீசிய அப்பன்  கண் விழித்து  தன் உயிர் காணாது  பிதற்றிய அவள் அன்னை  இவள் செய்த பிழையென்று சொல்வதா ?  பிறர் செய்த சதியென்று  சொல்வதா? இத்திரு நாட்டில் உதித்து விட்டாள் ! போர் குணம் படைத்த இவள் ! இதழ் விரிக்கவும் இல்லை  இந்த இளம் பூ மொட்டு ! கண்ணடிகளால் கருகி தான் விடுவாளோ ? வீரி இவள் சாட்டை சொடுக்கி  விரட்டி விட்டாள் அவர்களது   கண் பிடுங்கி ! இவள் செய்த பிழையென்று சொல்வதா ?  பிறர் செய்த சதியென்று  சொல்வதா? இத்திரு நாட்டில் உதித்து விட்டாள் ! போர் குணம் படைத்த இவள் ! தன் கையே தனக்குதவியை தாண்டி  பிறருக்கும் உதவி என்பாள் இவள் ! பெருக்கெடுக்கும் பொறாமை ! பெண்ணிவள் எனக்கு மேலா ? நசுக்கு அவளை  நச்சுப் பாம்புகள் சுற்றி வளைக்கும்! வெட்டி வீசி விரைந்து செல்வா...

காதல் - கருப்பா, சிவப்பா?

படம்
காதலா? அது எப்படி இருக்கும் ? கருப்பா ? சிவப்பா ? ஏதோ புனிதமானதாமே ? வயிற்றுக்கும் தொண்டைக்குமாய் உருளை உருளுமாமே ? கனவுக்குள் மிதக்க வைக்குமாமே ? காணும் கல்லிளெல்லாம் கலை உருகுமாமே? கேட்கும் ஒலியெல்லாம் இசையாய் ஜொலிக்குமாமே? பாடல்கள் ஆக்கப்பட்டதே  தனக்காய்த் தோன்றுமாமே ? அப்பாவின் திட்டுகள் தாலாட்டுகள் ஆகுமாமே? என்னமோ, என்னைத் தூக்கிக் கொஞ்சும் போதெல்லாம் இந்த அக்காள் பேசிச்சொல்கிறாள்! எனக்கு ஒன்றும் புலப்படுவதில்லை!

நண்பன்டா !

படம்
தோழர்கள் கட்சிக்குள் அடிமட்ட தொண்டனாய் நுழைந்து ரகசியங்கள் முதன் முதலாய் உன்னிடம் பிரசுரிக்க படும்போது நீ "நண்பன்டா " ஆகிறாய் !!

நம்பிக்கை எனும் வழிகாட்டி

படம்
வழி தெரியாத பாதையில் தன்னந்தனியாய் நான் ! நடக்க ஆரம்பித்த போது பயம் இருந்திருக்கவில்லை களைப்பும் சலிப்பும் தெரியாதிருந்தது ! ஒரு மணி நேரம் பல மணிகளாய் பல்கிப்பெருகி கொண்டே இருக்கிறது! வளைவுகளையும் மேடு பள்ளங்களையும் உணர்ந்து கொண்டே ஊர்ந்து போகிறேன் ! அப்பப்போ வந்து போகும் வழிபோக்கர்கள் மேகம் சேரும்போது  வரும் மழையாய் வந்து  சூரியக்கதிர்களோடு சேர்ந்து ஓடிவிடும் நீராவியாய் கரைந்து மறைந்து போவதாய் பட்டது ! திடீரென்று, எங்கு போகிறேன் என்ற கேள்வி விடை தெரியாத ஒன்றாய் மாறி என்னை பார்த்து இளித்தது ! எதிர் சிரிப்பு சிரிக்க நினைக்கையில் நிஜத்திலேயே விடை விட்டுப்போனதை  உணர்ந்து கண்கள் கண்ணீர் துளிகளை அளிக்கிறது ஆபத்பாந்தவனாய்த் தன்னை எண்ணிக்கொண்டு ! இருந்த கொஞ்ச நஞ்ச ஒளியும் இருளோடு இணைந்து இருள் குழந்தைகளை மட்டுமே படைதளித்துக் கொண்டிருப்பதாய் பட்டது! பயணம் முடிவதற்கு முன் நான் முடிந்து விடுவேனோ என்றெண்ணி எனது விழிகள் தேடுதல் வேட்டை நடத்த வழிகாட்டியாய் வந்த ஒரு ஒளிக்கீற்று ...

காரணம் இல்லாத உணர்வுகள்

பார்ப்பது கிடையாது அடிக்கடி, பார்த்தாலும் பேசுவதை எண்ணி விடலாம் விரல் விட்டு ! யாரும் கந்தஷஷ்டி கவசம் போல ஒவ்வொரு காலையும் புராணங்கள் சொல்வதில்லை வீர செயல்கள் இவை என்று! எனக்கெனச் செய்த உதவிகள் முட்டை வடிவத்தையே காட்டச் செய்தன! இருந்தாலும் எனக்கு இவ்வளோ பிடிக்கும் எனச் சொல்ல தூண்டுது குழந்தை மனது!

Poetry Competetion and How I became a Cindrella!

It was my first poetry competition, that was held in my office. They gave the topic as "Rain". But there were no thoughts pouring like rain. Finally got a thread, out of which the poetry came out. Here is the poem/rhyme/lyrics, whatever it means to you ;) Rain That was a rainy day, Towards the school, on my way! Met a plant, it just smiled, Too big flower, but not so wild, "Why so happy?", it was me, "Took bath with some fresh water, you see!" That was a calf, I saw jumping, With small happiness, my heart was pumping, "Why so jumpy??",it was me, "Fresh and lively, that's how I feel!" Then, there came a small sparrow, Looked like it had lost the word "sorrow", "Flying with colors??",it was me, "Sprinkles of happiness that hit me!" Look at me, poor little Cindrella, I know, its time to fold my umbrella, That I have now found the prince of happiness, The rai...

குழப்பத்திலும் கவிதை தோன்றுமா ??

காலையில் ஒரே  மகிழ்ச்சி அருமையான ஒரு கவிதை தோன்றியது சேமித்து வைக்கவில்லை மாலையில் சேர்த்து படைத்து கொள்ளலாம் என்று! மாலை வருவதற்குள் சில பல நிகழ்வுகள் பல  பல விமர்சனங்கள் வாள் சண்டையிட்டு கொண்டிருந்தன பல கேள்விகள் ! சிதைந்து போயிருந்தது  எனது  கவிதை ! எனக்குள் மோதி கொண்டிருந்த கேள்விகள் கொஞ்சம்  கொஞ்சமாய் எனது கவிதையை கிழித்து அழித்து கொண்டிருந்தன ! மிச்சம் இருப்பதையாவது படைப்போம் என்று மனதை தேற்றி கொண்டு  உட்கார்ந்திருந்தேன் மாலையை எதிர்நோக்கி !! அதற்குள் அழிந்து விடுவாயா என் கவிதையே!!

மௌனமே மொழி ஆதல்!

கருவாய்  உதித்து காலால்  உதைத்து உருண்டு  பிரண்டு வெளியில்  வரும்வரை அவளுக்கும்  எனக்கும்  நடந்த   உணர்வு  பரிமாற்றங்கள் ! திடீரென  கண்ணுக்குள்  ஏதோ  வெள்ளை  பந்து  போல் பாய்ந்து  வந்தது முதல்  முறையாக  அழுகிறேன் ! உள்ளிருந்த  போதும்  அழுதேனோ ?! மௌனம் ! வெதுமையாய் வெள்ளை  துணிக்குள் அவள்  பக்கத்தில்  கிடக்கிறேன்  மௌனமாய்! கண்களில் சிறு  துளி  கண்ணீரோடு மௌனமாய் தடவி  விடுகிறாள் ! என்  ஒவ்வொரு  அசைவையும்  புரிந்து  நிகழ்கிறாள்!  ஸ்பரிசிக்கிறாள்!  சுவாசிக்கிறாள் ! அவளை  சுற்றி  விழுந்த ஆயிரம்  வார்த்தைகளையும்  வெல்ல  கூடியதாய்  உள்ளது எந்தன்  மௌன  மொழி!