நீ ஏன் காதலிக்கவில்லை ??

என்னை பார்த்து ஒரு கேள்வி !
நீ ஏன் காதலிக்கவில்லை ??
என் காதல் கதைகளை தான் கேளுங்களேன் !

அந்தி மாலை வேளையில்
செவ்வானத்துக்குள் சென்று சூரியன் ஒளிந்துகொள்ள
அவனை துரத்திய படியே
கரு நீல வானத்தில் வெள்ளை பந்தாய்
திரியும் வெண்ணிலவு என் முதல் காதல் !

திருட்டு பூனை என்ற புனை பெயர் இருந்தாலும்
எங்கள் வீட்டு பூனை சர்க்கரை கற்கண்டு !
கூப்பிட்ட உடன் ஓடி வந்து எட்டி பார்க்கும்
என் கிளீஸ் குட்டி எனக்கு இரண்டாவது காதல் !

செடி வளர்ந்து பூ விரியும் நேரம்
வசந்த காலமே வாழ்கையில் வந்தது போன்ற மகிழ்ச்சி !
ரொம்ப நாளாய் ஆசை பட்டு
தண்ணீர் பாட்டிலில் வீடு கட்டி
ரகசியமாக தங்கவைத்துள்ள  டேபிள் ரோஜா செடி
என் மூன்றாவது காதல் !

தனியாய் இருக்கும் நேரங்களில்
அவன் தான் எனக்கு ஆறுதல் !
அவனை எடுத்து நளினமாய்
நாலு கிறுக்கல் கிறுக்கினால்
குழப்பங்கள் காணமல் போகும்
கலர் கலராய் கனவுகள் வந்து ஒட்டி கொள்ளும் !
எனது பெயிண்ட் டப்பா தான் என் அடுத்த காதல் !

ஹச்சிகோ-வையும் மைலோ-வையும்
பார்க்கும் போதெல்லாம் எனக்குள் ஏக்கம் !
என்னை விடாது தொரத்தும்
கண்கள் மின்ன என்னை பார்த்து வாலாட்டி வரும்
ஒரு குட்டி நாய் குட்டி இப்போதைய
வெய்டிங் லிஸ்ட் காதல் !

சொல்ல பட்ட பாதி கதைகளே
முதல் கேள்வியை அர்த்தமில்லாததாக்கி  விட்டதல்லவா?

கருத்துகள்

  1. nice...it shows everyone in the world love something at all anything...u r explaination u r love is very nice...i too have a love stories like this..

    பதிலளிநீக்கு
  2. The first description is really awesome d...abt the sun and the moon....and of course the painting description is also good one d....great work...

    பதிலளிநீக்கு
  3. Anu.. Thank you :)

    Rams.. meethi kathaigal sollavendiya neraththil sollapadum .. hehe :D

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக