இடுகைகள்

tamil லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாம்பல் உணர்வுகள்

குட்டிப் பாப்பா! புடிக்கலையா அழுதுடும் புடிச்சதுனா சிரிச்சிரும்! கருப்பு வெள்ளை தான் தெரிஞ்ச உணர்வுகளின் வண்ணம்.. நான் நினைத்துப் பார்க்கிறேன்! ரொம்ப புடிக்கும் கொஞ்சம் புடிக்கும் புடிக்காது, ஆனா பரவாயில்லை புடிக்காது சுத்தமா புடிக்காது தாங்க முடியாது அழுகை முட்டும் பல சாம்பல் நிற உணர்வுகள் தான் மிஞ்சி இருக்கின்றன! கருப்பும் வெள்ளையும் காணாமல் போனது எப்போதோ?

YOSIKKATHAAN VENDUMO??

லெப்ட்ல கட் பண்ணு; ரைட்ல கட் பண்ணு! வித்யாசாகர் வாட்சும் பஸ்சும் காரும் ட்ரெயினும் லைட்டும் சுச்சும் தமிழென்று நினைத்தே நிறைய தமிழன் - செத்துவிட்டான் தேங்க்சும் சாரியும் "பட்" டும் "சோ" வும் எஸ்கூஸ்மியும் தமிழாகிவிடுமென்றே நிறைய தமிழன் வெய்ட் பண்றான்; லெப்டும் ரைட்டும் கட் பண்ணியும் வாழ்க்கையில் அவுட் ஆகாத தமிழன் - தமிழை சூட் பண்ணியும் வெற்றிய மீட் பண்றது தான் கேட்க கேவலமா இருக்கு; ரைட்டோ தப்போ வாழ்க்கைய ஸ்ட்ரெய்ட்டா வுடு எந்த கார்னர்ல முட்டிக்கினாலும் எல்லாம் எஸ்பீரியன்ஸ் தான்னு சொல்லிக்கிற தமிழனின் ஆங்கில டம்பத்தில் - தான் வீழ்கிறது தமிழ்! சார் என்று சொல்லும் தமிழனுக்கு ஐயா என்று சொல்வதிலும் பங்க்சன்ல ஜாய்ன் பண்ணி பார்ட்டி வைக்குற தமிழனுக்கு பார்ட்டியை விழா என்று உச்சரிக்கவும் எந்த மானம் கப்பலேறிப் போகிறதோ தெரியவில்லை! ஸ்டைலுக்கு பேசுமிந்த மொழி அறியாமையால் ஆங்கிலம் கலந்து அறுபட்டு வாழும் தமிழ் - நம் வாழ்வின் அடையாளத்தையும் நம் யதார்த்தங்களையும் நாளை - மொழி திரித்துக் குறித்துக் கொள்ளுமெனில் யாரால் திருத்தி விட முடியும்? வேறொன்றும் வேண்டாம், வாயில் ...