குடியரசு தின வாழ்த்துக்கள்!!

ஆஹா நாளை குடியரசு தினம் !
எல்லாருக்கும் மனதில் தோன்றுவது 
விடுமுறை நாளைக்கு !  
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கவலை !
எப்படி நாளைக்கு பொழுத போக்குவது ! 
ஒருவன் படம் பாக்க போலாம் என்கிறான்  ! 
இன்னொருத்தி  ஷாப்பிங்  போகலாம்  என்கிறாள் ! 
எல்லாரும் மறக்காமல் குறுஞ்செய்தி அனுப்பி கொள்கிறார்கள்   ! 
குடியரசு தின வாழ்த்துக்கள் என்று !
ஒருவரேனும் இத்தினத்தின் சிறப்பை உணர்கிறார்களா ?!!
நாம் ஆள வேண்டிய நாட்டை 
அரசியல் என்னும் சாக்கடையை நிரப்பி 
ஓரமாய் நின்று வேடிக்கை பார்த்து கொண்டே 
வாழ்த்துக்கள் சொல்லி கொள்கிறோம் 
நம் நாடு குடியரசு என்று !    
வெளி நாட்டு கம்பெனி-கு  வேலை முடிக்க மூளையை கசக்கி பிழிகிறோமே!
தேர்தலில் வாக்களிக்கும் போது சிந்திப்போம் ! 
கேள்வி கேப்போம் ! 
லஞ்சம் ஒழிப்போம்! 
தலைவா என்று ஆளுபவர் காலடியில் விழுந்து கிடக்க வேண்டாம் ! 
அத்தலைவன் மனதில் பயம் உண்டாக்குவோம் ! 
நாம் ஆளும் நாடிது என்று நிமிர்ந்து நிற்போம் ! 
நாளை சொல்லி கொள்வோம் "குடியரசு தின வாழ்த்துக்கள் !"  




கருத்துகள்