இடுகைகள்

மனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முகமூடி விலை குறைவா?

முன் சிரித்துப் பின் பதுங்கும் முகமூடி மனிதர்கள் பல பேரை காண்கிறேன் நான்! நண்பனாம் தோழியாம் சொல்லி சொல்லி மகிழ்கிறார் அழ ஒரு தோள் வேண்டும் சொல்லாமல் மறைகிறார்! கூடத்தான் நடந்தார்கள் இக்காட்டுவழி பாதை தனில் கண் முழித்துத் தேடிப்பார்த்தேன் கானல் போன்ற கனவுலகில்! விளிக்கிறேன் விழிக்கிறேன் பின்பு ஒருக்களித்து படுக்கிறேன் முகமூடி விலை வெகு குறைவு போலும் என்றெண்ணியபடி! என் வசமும் ஒன்றிருந்ததைத்தான் முறறிலும் மறந்திருந்தேன்!

இரு தலைக் கொள்ளி எறும்பு !!

இரண்டில் ஒன்று தொடு - என்று விளையாடி வென்று முடிவெடு  என்றார் சிறுபிள்ளைத்தனமாக !!  ஒன்று தன் மகிழ்ச்சி!!  மற்றொன்று அடுத்தவர்  மகிழ்ச்சி !!  இரண்டுமே மிகத் தேவை! ஆனால்  கொடுக்கப்பட்டது ஒரு வாய்ப்பு !! இப்படித் தான் தவிக்குமோ  இரு தலைக் கொள்ளி எறும்பு ??!!

சொன்னதை கேட்கும் மனம்

கூடாது கூடாது என்று சொன்னால்தான் நினைப்பேன் நினைப்பேன் என்று சொல்லாமல் சொல்லி அடம்பிடிக்குது  ! விட்டு விடு விட்டு விடு என்று பலமுறை கூறி விட்டேன் கேட்டுகொண்டதாய் தெரியவில்லை ! திரும்பி திரும்பி பார்க்காதே ஒன்றும் வேலைக்காகாது என்றேன் கண்கள் முன் நோக்கவில்லை ! சரி போனால் போகிறது இந்த ஒரு முறை மட்டும் என்றபடி 10 ரூபாயை எடுத்து கொடுத்து வங்கிக்கோ  ஐஸ் கிரீம் என்றதும் மனம் நான் சொன்னதை கேட்டு நடந்ததாய் தோன்றியது !!