இனம் புரியாத குழப்பங்கள்

எனக்கு நானே சொல்லி கொள்கிறேன்
என்னோடு பலர் சண்டையிட்டு ஓடி செல்லும் போது
தேவை இல்லை யாரும் என்று
என் குணம் இது தான் என்று
புரிந்து கொள்ளாதவர்கள் வேண்டாம் என்று
என் இதயம் கண்ணீர் சிந்துவதல்ல வீரம் செரிந்தது என்று  
இருந்தாலும் இனம் புரியாத குழப்பம் ஒன்று
மூளையை குடைந்தெடுத்து
இதயத்தில் வலி ஏற்படுத்துவதை
தடுக்க முடியவில்லை என்றும் ! 

கருத்துகள்