காரணம் இல்லாத உணர்வுகள்

பார்ப்பது கிடையாது அடிக்கடி,
பார்த்தாலும் பேசுவதை எண்ணி விடலாம்
விரல் விட்டு !

யாரும் கந்தஷஷ்டி கவசம் போல
ஒவ்வொரு காலையும்
புராணங்கள் சொல்வதில்லை
வீர செயல்கள் இவை என்று!

எனக்கெனச் செய்த உதவிகள்
முட்டை வடிவத்தையே காட்டச் செய்தன!

இருந்தாலும் எனக்கு இவ்வளோ பிடிக்கும்
எனச் சொல்ல தூண்டுது
குழந்தை மனது!

கருத்துகள்