மௌனமே மொழி ஆதல்!

கருவாய்  உதித்து
காலால்  உதைத்து
உருண்டு  பிரண்டு
வெளியில்  வரும்வரை
அவளுக்கும்  எனக்கும்  நடந்த  
உணர்வு  பரிமாற்றங்கள் !

திடீரென  கண்ணுக்குள்  ஏதோ 
வெள்ளை  பந்து  போல்
பாய்ந்து  வந்தது
முதல்  முறையாக  அழுகிறேன் !
உள்ளிருந்த  போதும்  அழுதேனோ ?!
மௌனம் !

வெதுமையாய் வெள்ளை  துணிக்குள்
அவள்  பக்கத்தில்  கிடக்கிறேன் 
மௌனமாய்!

கண்களில் சிறு  துளி  கண்ணீரோடு
மௌனமாய் தடவி  விடுகிறாள் !
என்  ஒவ்வொரு  அசைவையும்  புரிந்து 
நிகழ்கிறாள்!  ஸ்பரிசிக்கிறாள்!  சுவாசிக்கிறாள் !

அவளை  சுற்றி  விழுந்த
ஆயிரம்  வார்த்தைகளையும் 
வெல்ல  கூடியதாய்  உள்ளது
எந்தன்  மௌன  மொழி!


கருத்துகள்

  1. கவிதையில் நல்ல முதுர்ச்சி தெரிகிறது!!! கவிதை எழுதியவர் சற்று முன்பு கல்லூரி படிப்பு முடித்தவர் என்றால் யாரும் அவ்வளவு சீக்கிரமாக நம்ப மாட்டார்கள்!
    ஒரு வேண்டுகோள் : "காதல், பெண், குழந்தை" இது போன்றே நீங்கள் அதிகமாக எழுதுகிறீர்கள் சற்று மாடர்னாக எதாவுதது முயற்சிக்க கேட்டுக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி ! முயற்சி செய்கிறேன் நண்பரே ! :)

    பதிலளிநீக்கு
  3. நல்ல தேடல்.. வாழ்த்துகள் ...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக