இடுகைகள்

பிப்ரவரி, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விழுந்தேன் ! எழுந்திட வியந்தேன் !

நேற்று பார்த்த படமொன்றில் கத்தியை உள் வாங்கியபடியே உயிரை வெளியே விட்டு கொண்டிருந்த தம்பியை திரும்ப அழைக்க போராடிய அண்ணனை பார்த்த போது இறப்பு என்னை பயமுறுத்தியது ! அறுந்து போன செருப்பு பேருந்து நிறுத்தத்தில் செருப்பு தைப்பர்! அந்த தள்ளாத வயதில் நிழலில்லாத மரத்தடியில் அவர் செருப்பை குத்திய போது முதுமை என்னை ஈட்டி போல் தாக்கியது ! தாக்குதல்களோடு போன நான் தோழிகளால் தாக்க பட்டேன்! அரசியலும் சினிமாவும் அறை பட அரை மணி நேரம் வேடிக்கை முடிந்து கிளம்பும் போதுதான் உணர்ந்தேன் தாக்குதல்கள் தாக்காமலே போயிருந்ததை ! உறவுகளை பொறுத்தே உள்ளம் ! உணர்வுகள் மதிக்கப்பட்டால் இறப்பும் சுலபமானது, நிழலில்லாத மரத்தடி உழைப்பும் இனிமையானதே !        

இனம் புரியாத குழப்பங்கள்

எனக்கு நானே சொல்லி கொள்கிறேன் என்னோடு பலர் சண்டையிட்டு ஓடி செல்லும் போது தேவை இல்லை யாரும் என்று என் குணம் இது தான் என்று புரிந்து கொள்ளாதவர்கள் வேண்டாம் என்று என் இதயம் கண்ணீர் சிந்துவதல்ல வீரம் செரிந்தது என்று   இருந்தாலும் இனம் புரியாத குழப்பம் ஒன்று மூளையை குடைந்தெடுத்து இதயத்தில் வலி ஏற்படுத்துவதை தடுக்க முடியவில்லை என்றும் ! 

முடியாத காதல் படிப்போம் நாம் !

ஓரக்கண்ணால் பார்வை உதட்டோரம் ஒரு சிரிப்பு காதல் வந்துருச்சு என்று சொல்லும் ! நாலு நாள் குறுந்தகவல் பரிமாற்றம் அடுத்த நாலு நாள் விடிய விடிய பேச்சு மனசுக்குள்ள எதோ பட்டாம்பூச்சி பறக்கும் ! காதல் வந்தாலே அவன் தமிழ் படத்து  நாயகன் அவள் அதே படத்தில் நாயகி ! கதை அவர்களை விட்டு விலகி போவதே இல்லை ! போனாலும் வில்லனாய் இருக்கும் அப்பா அம்மா தம்பி மாமா மச்சினன் தான் வருவார்கள் ! இவ்வளவு நாள் என்ன செய்யலாம் என்று நினைத்தோம் ? தெரியாது  ! இனி காதல் செய்வோம் ! கனவு காண்போம் ! கண்ணிமை மூடும் நேரம் நீ ! கண் விழித்து பார்த்தல் நீ ! திரைப்படங்கள் வில்லனை ஜெயித்து திருமணத்தில் முடிவது போல திருமணத்துக்கு பிறகு பல நேரங்களில் இக்காதலும் முடிந்து விடுகிறது !  இனியேனும் முடியாத காதல் படிப்போம் நாம் !