அம்மாஞ்சி Professor -உம் Project Spectacles-உம் !

Project Spectacles- ஐ  பற்றி கேள்வி பட்டவுடன் முடிவு செய்து விட்டேன், மார்க்கெட்- க்கு வந்ததும் முதல் ஆளாய் போய் வாங்கி உபயோகித்து பார்த்து விட  வேண்டும் என்று. ஊர் பூராமும் அதை பற்றி தான் பேச்சு.
"அது  ரொம்ப  stylish ஆக இருக்குதாமா டா"

"ஆமா  டா.. அதே  சமயம் நம்ம கண்ணாடி போட்டிருந்தாலும் easy ஆக use பண்ணிக்கலாமா மச்சி"

"எங்க இருந்தாலும் நம்ம காதலிய மிஸ் பண்ணாம பேசிட்டே, பாத்துட்டே இருக்கலாம் டா  "

"சாத்துடா  அவன.. அடங்கவே மாட்டானா ??!"

காலேஜ்-குள்ள   enter  ஆனதும்  காதில்  விழும்  முதல் பேச்சு இப்படி  தான். நான் எடுக்கிற  கிளாஸ்-அ  கவனிக்ரான்களோ இல்லயோ  , Project Spectacles அ  பத்தி பேசிட்டே  இருக்கானுங்க  இந்த பசங்க  !

இந்த பொண்ணுங்களாவது படிப்ப பத்தி பேசுவாங்கன்னு paaththa , anga library ல ukkanthu  

"aeii, இந்த கண்ணாடி super dee.. நம்ம ஆள thontharavu pannittae  இருக்கலாம்!"

" ivalukku iva prachina dee.. நம்ம thaniya camera வாங்கி போட்டோ எடுக்க வேணாம் ! இதுவே pothum ! jolly-ல ? "

"ஆமா ஆமா டி.. "

"அது மட்டுமில்லாம அப்பபோ status  போட்டுக்லாம், போடோஸ் அப்டியே ஷேர் பண்ணிக்கலாம்!"

"shopping-க்கு கூட நல்லா guide பண்ணும் :D "

அதானே கடசில shopping ல வந்து நிப்பாட்டனும். இந்த பொண்ணுங்கள மட்டும் திருத்தவே முடியாது.

இப்படி காலேஜ் ல தான் இத பத்தி பேசிட்டு இருக்காங்க, வீட்டுல போய் நிம்மதியா இருக்கலாம் என்று நினைத்தால், எங்க அம்மா.,(80 vayasunga )

"ஏண்டா சிவநேசா! எதோ கண்ணாடி கண்ணாடி நு பேசிக்கிறாங்களே. அது என்ன டா அது! எனக்கும் வயசான காலத்துல கண்ணு தெரிய மாட்டிங்குது ! ஒன்னு வாங்கி குடு டா..  "

அப்போ தான் , நான் முடிவே செய்து விட்டுருந்தேன். கடையில் முதல் ஆளாய்  போய் நான் வாங்கி விட வேண்டும் என்று.

ஆங்.. சொல்ல மறந்து விட்டேனே. எந்த டிவி சேனல்-ஐ போட்டாலும் Project Spectacles புராணம் தான். அரசியல் இல்லை, கிரிக்கெட் இல்லை, சினிமா இல்லை. இப்போ நான் டிவி-ஐ on செய்ததும் Spectacles-ஐ பற்றிய செய்திக்காக தான்.

"வணக்கம்! தலைப்பு செய்திகள் ! "

இந்த வணக்கதுக்கொன்றும் குறைச்சல் இல்லை. செய்தியை சொல்லம்மா. - இது நான்.

"அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த Project Spectacles நாளை இந்திய மார்க்கெட்-ஐ தொடுகிறது. அனைத்து கடைகளிலும் காலை 4 மணி முதல் விற்க ஆரம்பிக்க படும் என்று எதிர்பார்க்க படுகிறது !"

4 மணிக்கு விற்பனை ஆரம்பமா?  இந்த இளசுகள் 4 மணிக்கு எங்கே  எழுந்திருக்க போகிறார்கள்   ! நான் தான் முதல் ஆளாய் போய் வாங்கி விட போகிறேன்.

காலை 3 மணிக்கே அலாரம் வைத்து  விட்டு தான்  தூங்க போகிறேன். யார் எனக்கு முன்னாடி "Sivaram opticals" - ல போய் வாங்கிட போறாங்கனு பார்க்கிறேன் . இனிய இரவு. நிறைய கனவு. ;)

P.S: For those who feel blank about what project spectacles is: Google's Project Glass

கருத்துகள்

  1. நல்லா தான் இருக்குங்க அம்மணி project class.:D..
    ஆனா இந்த காலத்து புள்ளைங்களுக்கு கைல mobile இருக்கும் போதே road -ல கண்ணு தெரிய மாட்டேன்னுது. இத வேற போட்டு விட்டா அவங்க அலும்பு தாங்க முடியாது போல ..:P

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக