விழுந்தேன் ! எழுந்திட வியந்தேன் !

நேற்று பார்த்த படமொன்றில்
கத்தியை உள் வாங்கியபடியே
உயிரை வெளியே விட்டு கொண்டிருந்த
தம்பியை திரும்ப அழைக்க
போராடிய அண்ணனை பார்த்த போது
இறப்பு என்னை பயமுறுத்தியது !

அறுந்து போன செருப்பு
பேருந்து நிறுத்தத்தில் செருப்பு தைப்பர்!
அந்த தள்ளாத வயதில்
நிழலில்லாத மரத்தடியில்
அவர் செருப்பை குத்திய போது
முதுமை என்னை ஈட்டி போல் தாக்கியது !

தாக்குதல்களோடு போன நான்
தோழிகளால் தாக்க பட்டேன்!
அரசியலும் சினிமாவும் அறை பட
அரை மணி நேரம் வேடிக்கை முடிந்து
கிளம்பும் போதுதான் உணர்ந்தேன்
தாக்குதல்கள் தாக்காமலே போயிருந்ததை !

உறவுகளை பொறுத்தே உள்ளம் !
உணர்வுகள் மதிக்கப்பட்டால்
இறப்பும் சுலபமானது,
நிழலில்லாத மரத்தடி உழைப்பும் இனிமையானதே !



   



 



 

கருத்துகள்