குழப்பத்திலும் கவிதை தோன்றுமா ??

காலையில் ஒரே  மகிழ்ச்சி
அருமையான ஒரு கவிதை தோன்றியது
சேமித்து வைக்கவில்லை
மாலையில் சேர்த்து படைத்து கொள்ளலாம் என்று!



மாலை வருவதற்குள்
சில பல நிகழ்வுகள்
பல  பல விமர்சனங்கள்
வாள் சண்டையிட்டு கொண்டிருந்தன
பல கேள்விகள் !

சிதைந்து போயிருந்தது  எனது  கவிதை !

எனக்குள் மோதி கொண்டிருந்த கேள்விகள்
கொஞ்சம்  கொஞ்சமாய் எனது கவிதையை
கிழித்து அழித்து கொண்டிருந்தன !


மிச்சம் இருப்பதையாவது படைப்போம்
என்று மனதை தேற்றி கொண்டு  உட்கார்ந்திருந்தேன்
மாலையை எதிர்நோக்கி !!


அதற்குள் அழிந்து விடுவாயா என் கவிதையே!!



கருத்துகள்

கருத்துரையிடுக