இடுகைகள்

2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Untold Stories!

Hey you! Do not tell me, you have shared everything to at least somebody in this world. There are always unheard, untold stories which never can be shared, told because of shy, because of fear, because we do not wanna hurt others! I met a girl who said "Even I have many untold stories buried deep inside ma heart! Nobody knows what they are! Nobody asks about them too!" Yeah, when people had time to listen to others. If we look at old people sitting alone in deep thoughts, we can see a lot of stories  moving around in their heart through their eyes. They may have nobody to tell their stories. perhaps, nobody has time to listen to them in their busy machinery world. I have a friend whose favorite songs will say there is something hidden inside her heart which she never wants to share with anybody. Her all time favorite is Butterfly fly away,the song by Miley and her Dad. She always shed a drop of tear when she hears that song. Nobody knows whats the reason behind that t...

It was a Daring Day Indeed!

படம்
I always wanted to do daring things in ma life! Adventurous! Total fun leaving stuffs! As I started watching many english movies, the wish to do crazy stuffs has gone way too much ;) Yesterday was a chance that I used partially. Whoa.. It was team outing from our office! It was half day's plan to start by 2 to the resort where all the events were arranged.  But who will work when its the fun day already. Waiting for the clock's small needle to point to 2, everybody spent the entire morning without doing any work! :P How tiresome it will be work on such a warm day guys!! ;) Alright, thus we reached 2'o clock now. Lets start. "where is the bus??" , rolling my eyes,searching the entire area, I looked at all my company people entering into cabs, just those similar to that of CTS. How funny! Hmmmmm.. Come on! Its you who is going to create the fun, neither the bus, not this van! Said to myself! Nisha,my friend came from inside a van, where all my batch ...

பூனைக்கும் ஒரு காலம் வரலாம் !

அன்று காலையும் என்றும் போல தான் விடிந்தது. வார நாட்கள் எப்பொழுதுமே monotonous - ஆக தான் போகும்.  எப்ப தான் வெள்ளி வரும் என்ற எதிர்பார்ப்போடே  ஒவ்வொரு நாளும் போகும். அதுவும் கல்யாணம் ஆன பிறகு பொறுப்பு வந்து மொத்தமாக monotonous செய்து விட்டது நாட்களை.  எழுந்து சோம்பல் முறித்தவாரே மணியை பார்த்தேன். ஏழரை. அட.. நேரமாகி விட்டது. பையன வேற காலேஜ் ல விடனும். இந்த sid கு எப்போ தான் பொறுப்பு வருமோ ?!! கல்யாணம் ஆகி 20 வருஷம் ஆகுது. பொறுப்பா ஒரு 7  மணிக்காவது சுடு தண்ணி வெச்சுட்டு எழுப்பி விட வேண்டாமா ??!! கடுப்போட ஹால்- குள்ள போய் பையன் என்ன பண்றான்னு எட்டி பார்த்தேன். அவன் வேக வேகமாக முடிக்காத assignments -ஐ எழுதிட்டு இருந்தான். அடுப்படியில இருந்து விசில் சத்தம் கேட்டது. இன்னும் சமையல் வேலைய முடிக்கல. "Sid , என்ன டா இன்னும் cooking முடிலையா ? டைம் ஆய்டுச்சு செல்லம் ! " "இரு மா! சாப்பாடு விசில் வந்ததும் எறக்கி வெச்சிட்டு வந்துடறன்! நீ போய் குளிச்டு! நா துணியெல்லாம் தேச்சு வெச்சுதரன் அதுக்குள்ளே !  " சரி ! இவன் இப...

மருதமலை அனுபவம் !

கோவிலுக்கு போவது தெய்வீக அனுபவம் !  அடிக்கடி போய்  கடவுளை தொந்தரவு செய்ய விருப்பமில்லை எனக்கு !  அன்று போய்  ஒரு வணக்கம் சொல்லி வரலாம்  என்று புறப்பட்டேன் என் இனிய தோழிகளுடன் !  அவர்களை பற்றி கேளுங்களேன் !  ஒவ்வொருத்தியின் குணமும் ஒன்று !  ஒருத்தி அமைதியின் மறு உருவம் !  நம்மை அடிக்க வேண்டும் போல் தோன்றினாலும் வாய் திறந்து சொல்ல மாட்டாள் ! இன்னொருத்தியோ வாய் திறந்தால் காத தூரம் போன பின்பு தான் நிறுத்துவாள் ! நிறைய பேசுபவள் ! இன்னொருத்தி இருவருக்கும் நடுவே சிவனே என்று இருப்பவள் ! துறு துறு திரு திரு பெண்ணவள் ! மூவரும் அதிகாலை மலை மீது நடக்கிறோம் ! கதைகள் பல காற்றில் அடிபட்டது அப்போது ! பட படவென்று பறந்து போய் மூன்று யு வளைவுகள் இருந்த வரிசையில் வாயடித்த படி காத்திருந்தோம் கடவுளின் திருமுகம் காண ! கண்டோம் கண்டோம் ! முழு அலங்காரத்தோடு மன நிறைவோடு ஒளி நிரம்பிய கருவறையில் அரோகரா ஒலிக்கிடையில் ! முடிந்தது முருகனிடம் வேண்டுதல் ! இப்போது எங்களுக்கு பசியின் தூண்டுதல் ! அங்கு சுற்றி இருந்த கடைகள் மொத்தத்திற்க...

பட்டாம்பூச்சி பறக்றதுனா இதானா ?

கண் வழியாக புகுந்த பட்டாம்பூச்சி அவன் வயிற்றுக்குள் சிறகடித்துப் பறந்ததாம்  அவளை பார்த்ததும் ! 

உள்ளத்து உறவுகளும் பயமளிக்கும் விந்தை !

அதிக நெருக்கம் உள்ள உறவுகளில் பயமும் வந்து ஒட்டிகொள்கிறது! உடைந்து போனாலும் வலி ! பற்றி இருந்தாலும் வலி ! அது, பற்றி எறியும் நெருப்பினூடே பயந்து சாவும் பஞ்சைப் போன்றது ! நாம் நெருப்பானால் விலகி போகும் பஞ்சு சாம்பலாகி வலி கொடுக்கும்! நாம் பஞ்சானால் நெருப்பின் சூடு நம்மை சுட்டு பொசுக்கும் ! பயம் மறைய வலி குறைய இரண்டுக்கும் தேவை வெற்றிடம் நிரம்பிய இடைவெளி !

ஏழாம் அறிவு பற்றிய எனது அறிவிற்கு எட்டிய கருத்து !

அந்த வாரம் ஊருக்கு போக வேண்டி இருந்தது. ஆத்தாவின் கண் அறுவை சிகிச்சை முடிந்திருந்த காரணத்தால் அவர்களை நலம் விசாரித்து வர.  எனக்கு தெரியும் எப்படியும் ஞாயிறு முழுவதும் வெட்டியாக தான் கழியும். ஏதேனும் பண்ணலாமே ?!! எனது அத்தை மகள் கல்லூரி விடுமுறையில் வீட்டில் இருந்தால். ஆஹா ! அருமையான யோசனை. படம் போகலாம். ஆக, ஞாயிறு அன்று மதியம் படம் போவது என முடிவு செய்தாயிற்று ! அதே தான். இப்படத்தை பற்றிய எனது சிறு கருத்து. :)  தமிழ் படங்களை அவ்வளவாக நான் பார்க்க போக மாட்டேன். வித்தியாசமாக இருக்கிறது என்று சொன்னாலே என்னை நீங்கள்  தியேட்டர்களில் பார்க்க முடியும்.  ஆறறிவிற்கு எட்டிய கதைகளை பேசாமல் ஏழாம் அறிவு கதைக்கு வருவோமா? அப்பபோ பூக்கும் குறிஞ்சி மலர் போல, அப்பபோ வித்தியாசமான கதையில் வருகிற படங்களில் ஒன்று இது எனலாமா ?  நல்ல கதை. போதிதர்மர்- ஒரு தமிழர். பல கலைகளில் சிறந்து விளங்கியவர். சீனா மக்களால் போற்றபடுபவர். அவரை பற்றி தமிழ் மக்களுக்கு, இந்திய மக்களுக்கு தெரிவிக்க எடுத்த படம். நல்ல கரு.  இன்றைய மக்களுக்கும்,குழந்தைகளுக்கும்  தமிழ் வர...

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா ?

வீட்டு பாடம் எழுதாததற்கு     வெளியே  நிற்க  வைத்து  விட்டு அன்றைய பாடம்  முழுதும்  நடத்தி   வகுப்பு  முடிந்தபின்  உள்ளே  அழைத்து நாளைக்கும்  வீட்டு பாடம்  முடிக்கவில்லை ? நீ வெளியே   நான் உள்ளே என  விளையாடும்  வாத்தியார்  முட்டாளா இல்லை  பாடம்  எழுதாத  நானா ?

பெற்ற மனம் பித்து !

விசாரிப்புகள்   விளையாட்டாகவோ  வினயத்தோடோ   இல்லாமல் விசனத்தோடு  இருக்க  வேண்டுமென்பதை எப்படி  புரிய  வைப்பேன் கண்  அறுவை  சிகிச்சை  முடித்து வராத  உறவினரை  எதிர்பார்த்திருக்கும் எனது  ஆத்தாளிடம்!

தயக்கம் என்னும் தடைக்கல்!

சிந்தித்து பார்க்கையில்  சிக்கலேதும் இருக்கவில்லை  கடித்து தின்னும்  அரக்கனாகவும் தெரியவில்லை  முதல் வார்த்தைக்கே சுட்டு வீழ்த்தும்  தமிழ் படத்து வில்லனாயும் புலப்படவில்லை மூச்சு விட்டாலே முறைத்துப்பார்க்கும்  மூர்க்க குணமும் காணவில்லை இருந்தும்  ஒரு வார்த்தை கேட்க  ஓராயிரம் முறை யோசிக்க வைக்கும்  இந்தத் தயக்கம் என்னும் தடைக்கல் !

ஒவ்வொரு பெண்ணிற்கும் கனவுண்டு!

பதினாறு வயதில் சிட்டாய் பறந்து கொண்டிருந்த  பூக்காரியின் மகளுக்கும் தன்னவனைப் பற்றி பல கனவுகள் இருந்தது குடிகார அத்தை மகனுக்கு வாக்க பட்டு  முதல் அடி முதுகில் விழும் வரை ! 

இனிய சனி !

அன்று காலை விழித்ததும் நினைக்கவில்லை இன்று நான் என்னை புதிதாய் உணர்வேன் என்று. என்றும் போல விழித்த கண்கள் மூடிக்கொண்டன. 7 மணி என்ற போதும் எழலாமா வேண்டாமா என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டு இருந்தது மனம். அரை தூக்கத்தில் இருந்த என்னை பக்கத்துக்கு அறையில் இருந்து எழுந்து வந்து எனது தோழி எழுப்பினாள். அவளது அலுவலகத்தில் இருந்து வாரா வாரம் பக்கத்துக்கு தெருவில் உள்ள அரசு பள்ளிக்கு சென்று அவர்களுக்கு பாடம் கற்பிப்பார்கள். திடீரென அவள் என்னிடம் "நீயும் வாயேன் சௌமி" என்று கூறினாள். அட, நல்ல யோசனை. வீணாய் பொழுதை கழிப்பதை காட்டிலும் இது ரொம்ப நல்ல விஷயம் அல்லவா?  பட படவென எழுந்து கிளம்பி விட்டேன். ஒன்பதே முக்காலுக்கு தயாராக நிறுத்தத்தில் போய் நின்று விட்டோம். பக்கத்துக்கு KR bakery -இல்  ஒரு பப்ப்ஸ், ஒரு காபியோடு காலை உணவை முடித்து விட்டு அவர்களது organizer  காக காத்திருந்தோம்.  அவர் வந்ததும் ஒரு cab -இல் அனைவருமாக பள்ளியை அடைந்தோம். அறிமுகங்கள் முடித்து, பள்ளிக்குள் சென்றோம். எங்களுக்கு ஆறாம் வகுப்பு. அவர்களுக்கு மணியின் அளவைகளை சொல்லி ...

எனது கோபம்

நெருப்பால் காற்றோடு கண்ணிமைக்கும் நேரத்தில் காணாமல் கரைந்து போகும்  கற்பூரம் போன்றது  எனது கோபம் !  கல் போல கடுமையாக எண்ணி தள்ளி நிற்க வேண்டாம் ! நிற்கும் முன் நினைக்க, எறும்பு ஊற கல்லும் தேயும்  என்பது பழங்காலந்தொட்டு விளங்கும் மொழி ! 

காற்றோடு பேசிய கவிதை!

காற்றோடு கவிதை பேசிக்கொண்டிருந்தேன் நேற்று ! தென்றலாய் எனது கூந்தலோடு  ஓடிப்பிடித்து விளையாடி கொண்டிருந்தது ! பிடித்து நிறுத்தி கேட்டேன் 'வரும் வழியில் நீ அள்ளி வந்தது என்ன?' என்று ! பூக்களாய் சிரித்து விளையாடிய சிறு பிள்ளைகள்  வெள்ளை மனம் என்றால் என்ன என்பதை நினைவுபடுத்த ! மான் போல் துள்ளி ஆடிய பூவையர்கள்  மகிழ்ச்சி என்பது என்ன என்று காட்ட !  மாலை நேரத்தில் களைப்போடு வந்தாலும்  பிள்ளைக்கு முறுக்கும் மனைவிக்கு மல்லிகை பூவும் வாங்கி போன கணவன் குடும்பம் குதூகலம் என்று சொல்ல ! சொல்லி கொண்டே போனது பலப்பல விஷயங்களை ! 'அடுத்து எங்கு செல்கிறாய்?அங்கு என்ன சொல்வாய்?' என்று கண்ணடித்து கேட்டேன்  'ஒரு மின்னல் என்னை தாக்கியது' என்பேன் என்றது ! :P

எனது இதயம்!

எப்படி சொல்வேன்  எனது இதயம்  கல்லாய் கிடக்கவில்லை! தண்ணீராய் உறைந்து கிடக்கிறது ! நீ அடிக்கும் ஒவ்வொரு அடிக்கும்  அது கண்ணீர் சிந்தும் !

என் தோழியின் கதை ! ;)

Funny moments! :D :D *Unforgettables* நான் அப்போ மூன்றாம வகுப்பு படிச்சிட்டு இருந்தன் . எங்க கிளாஸ்ல  மொத்தம் 30  பேர் இருந்தோம். 15  சீட்ஸ் இருந்துச்சு. என் கூட சண்ட போடன்னே ஒருத்தன் இருந்தான். என் பக்கத்து seat- ல உக்காந்துட்டு வம்பு பண்ணிகிட்டே இருப்பான். இந்தியா பாகிஸ்தான் சண்டைய கூட தடுத்து நிறுத்திடலாம். ஆனா எங்களுக்குள்ள வர்ற Border சண்டைய கிளாஸ் டீச்சரே வந்தா கூட நிறுத்த முடியாது.  அன்னிக்கு அப்டிதான் கிளாஸ்ல மிஸ் maths கணக்கு பாடம் எடுத்திட்டு இருந்தாங்க. எழுதற அவசரத்துல என்னோட புக் Border -அ கொஞ்சமா தாண்டி போயிடுச்சு. நா அத கவனிக்கலங்க. கிளாஸ் முடிஞ்சு பாத்தா புக் காணாம போய்டுச்சு :( . என்னடானு பாத்தா,"புக் border -அ தாண்டி போய்டுச்சு! அதனால தூக்கி போடுட்டண் ! " அப்டின்னு சொல்றான். எவளோ கோவம் வந்துச்சுன்னா அப்டியே மிஸ் கிட்ட கூட complain  பண்ணாம அழ ஆரமிச்சுட்டன்! :( இத கூட மன்னிச்சு விட்ரலாம் போங்க ! எங்க ஸ்கூல்- ல அன்னிக்கு independence  day celebration . எங்க கிளாஸ் parade போறத பாக்க ஆசையா இர...

காத்திருத்தல் ~

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணிக்கு ரதம் போல வந்து சேரும் பேருந்து ! வழி மேல் விழி வைத்து தன் ரதிக்காக காத்திருக்கும் காதலன் போல நானும் காத்திருப்பேன் என் ரதத்திற்காக ! கடிகார முள்ளோ மெது மெதுவாய் தடிஊன்றி நடந்து செல்லும் ! டிக் டிக் என்ற அதன் காலடிகள் நான் தான் தாலாட்டு என்றென்னை வாட்டும் ! காத்திருந்து கண்கள் பூத்து போய் விடும் கேள்வி பட்டிருக்கிறேன் ! என் ரதத்திற்காக காத்து என் கண்களோ பூத்து வாடி காய்ந்தே போய் விடும் ! அட .. அதோ வருகிறது பேருந்து ! வாசலிலே வரவேற்க வாழை மரம் இருப்பது போல் பேருந்து வாசலிலே தள்ளி கொண்டு பயணிகள் வந்தால் அப்பொழுது புரியும் காத்திருத்தலின் கொடுமை என்னவென்று ! இந்த சாம்ராஜ்யம் தங்களது இளவரசி என்பது போல் காற்றை மட்டுமே இருத்தி கொண்டு பேருந்து வந்தால் மனதுக்குள் சீட்டி பறக்கும் காத்திருத்தலின் அருமை புரியும் !

சிறு துளிகள் !

எனக்கு திமிர் என்றும் மதிக்கத் தெரியாதவள் என்றும் கூறுபவரிடம் என்னை பற்றி கேட்டு விட்டு பாருங்கள் அவர்கள் திரு திருவென்று முழிப்பதை !! #வெறும் வாய்க்கு நாலு அவல் தேவை !:-P விருந்தில் சக்கரைப் பொங்கல் மட்டும் இருந்தால் விருந்து பூர்த்தியாகாது என்று தெரிந்தும் சிரிப்பை மட்டுமே நாடுகிறது மனது ! #mystery

Sowmiya's Kirukkalgal !

படம்

மறந்து விட்டோம் மனிதத்தை!!

பக்கத்து வீட்டில் இருபவளுக்கும் பிரச்னையா ? ஓடி போய் உதவி செய்தார்கள் ! என்ன ஏதென்று நலம் விசாரித்தார்கள் அன்று ! அழுது கண்கள் சிவந்து போயிருந்தாலும் எந்த serial ஐ பார்த்தாய் என கேலி செய்யுது உலகம் இன்று ! தினமும் மாலை நேரம் சந்தித்து சொந்த கதை அந்த கதை என பேசி மகிழ்ந்தார்கள் அன்று ! எந்நேரமும் வீட்டுக்குளே கிடந்து நான் உங்க பக்கத்துக்கு வீடுங்க என்றால் கதை விடுகிறாயா என்கிறார்கள் இன்று ! அன்று பொது சொத்தாய் இருந்தது நம்பிக்கை பாசம் நேசம் ! இன்று நம்பிக்கை அலுவலகத்தில் ! பாசம் வீட்டுக்குள் ! நேசம் நம் பணத்தின் மீது ! மறந்து விட்டோம் மனிதா மனிதத்தை ! நினைவு படுத்தி கொள் ! தொலைந்து போகும் முன் !

Netru Indru Naalai !

Netru pengal ! vaayalavilum madhika padathavarhal ! Veetukullae adainthu kida ! Soru pongi podu, aanal ne pongathae! Odingi kidanthanaro ! Indru pengal ! Sudanthiram adainthanaro ! Veliae po! Oor sutru ! Ulagai alanthu paar ! Aanal ne uyirodu thirumbi poha utharavatham Naangal illai ena aangal ! Naalai Pengal ! Uyirodu irunthal eluthukiraen ! Illai endral sorgathil iruntho narahathil iruntho Seithi anupukiraen !

Right to Vote! What does it mean?!

படம்
Its election time! I faced a typical election time in my life too. When i stepped into the college, you must know i was just Sowmiya. I was not knowing the different characteristics of the people. In a single simple word, partially innocent. I used to help my classmates with programs and whatever i know. As ours is a government institution, it was always self-study. I never cared about class problems. I never cared about teasings. I never cared about anything virtually. I went to the college. Smiled at whoever smiles to me. Spoke to whoever spoke to me. Did my work. ( Dont think i am So sincere! Did my work atleast at the last moment :-P ). This is how my life went. Then comes the second semester. Some interaction with seniors. Life went on. Two semesters got over. Holiday flew away. Hurray! I became the senior. He He.. No use. I was still the calm girl, But started by that time to put mokkais with my classmates and got a gang of friends. We always had fun meetings, official meetin...