என் தோழியின் கதை ! ;)

Funny moments! :D :D *Unforgettables*

நான் அப்போ மூன்றாம வகுப்பு படிச்சிட்டு இருந்தன் . எங்க கிளாஸ்ல  மொத்தம் 30  பேர் இருந்தோம். 15  சீட்ஸ் இருந்துச்சு. என் கூட சண்ட போடன்னே ஒருத்தன் இருந்தான். என் பக்கத்து seat- ல உக்காந்துட்டு வம்பு பண்ணிகிட்டே இருப்பான். இந்தியா பாகிஸ்தான் சண்டைய கூட தடுத்து நிறுத்திடலாம். ஆனா எங்களுக்குள்ள வர்ற Border சண்டைய கிளாஸ் டீச்சரே வந்தா கூட நிறுத்த முடியாது. 
அன்னிக்கு அப்டிதான் கிளாஸ்ல மிஸ் maths கணக்கு பாடம் எடுத்திட்டு இருந்தாங்க. எழுதற அவசரத்துல என்னோட புக் Border -அ கொஞ்சமா தாண்டி போயிடுச்சு. நா அத கவனிக்கலங்க. கிளாஸ் முடிஞ்சு பாத்தா புக் காணாம போய்டுச்சு :( . என்னடானு பாத்தா,"புக் border -அ தாண்டி போய்டுச்சு! அதனால தூக்கி போடுட்டண் ! " அப்டின்னு சொல்றான். எவளோ கோவம் வந்துச்சுன்னா அப்டியே மிஸ் கிட்ட கூட complain  பண்ணாம அழ ஆரமிச்சுட்டன்! :(
இத கூட மன்னிச்சு விட்ரலாம் போங்க ! எங்க ஸ்கூல்- ல அன்னிக்கு independence  day celebration . எங்க கிளாஸ் parade போறத பாக்க ஆசையா இருந்துச்சு. அதனால நா முன்னாடி போய் உக்காந்துகிட்டு இருந்தன். திடீர்னு  பாத்தா ஒரே கரு கருன்னு இருக்கு ! முன்னாடி நடக்றதே தெரில. அதே தான் போங்க! அந்த பையன் வந்து சூப்பரா எனக்கு முன்னாடி வந்து நல்லா  மறைச்சு உக்காந்துட்டான். எனக்கு கடுப்போ கடுப்பு. ஆனாலும் அவன் கிட்ட பேசறதா இல்ல. அப்டியே நா chair மேல ஏறி நின்னுட்டன். விட்டானா அவன். அவன் எனக்கு முன்னாடி ஒரு chair ah போட்டு jolly யா ஏறி நிக்கறான். என்ன ஒரு லொள்ளு பாத்தீங்களா ? சேரி போடான்னு   நெனச்சுட்டே நா பக்கத்துல இருந்த desk மேல ஏறி நின்னுட்டன். அப்பயும் விடுவனா புள்ளன்னு எனக்கு முன்னாடி desk போட்டு ஏறி நின்னுகிட்டான் :( ஒரு சின்ன பொண்ணு என்ன தான் பண்ண முடியும் அப்டின்னு நீங்க பாவ படறது எனக்கு புரிது. ஆனா நா விடலையே. கீழ எறங்கி அங்க இருந்த chair கிட்ட போனன். chair-அ தூக்கினன். தூக்கிட்டு வந்து desk மேல போட்டு , அந்த chair மேல நானும் ஏறி நின்னுட்டன். ஹா ஹா ஹா ! இப்போ என்ன பண்ணுவன்னு அவன பாத்து ஒரு நக்கலா ஒரு சிரிப்பு சிரிச்சு முடிகலங்க   உலகமே இருட்டான மாதிரி ஒரு பீலிங். அவ்ளோ தான்! என்ன நடந்துதுனே தெரில. கண்ண முழிச்சு பாத்தா கைல கட்டு தலைக்கு மேல glucose பாட்டில். ஆமாங்க மேல மேல போயிட்டு  ஒரே அடியா கீழ விழுந்துட்டன். :(

அதுல இருந்து அவன் என்ன வில்ல தனம் பண்ணினாலும் "விடு ! விடு! He  is  crazy and jealous! ", இந்த டயலாக் மட்டும் மனசுக்குள்ள ஒடிக்கும், இன்னும் கூட! :D :D


கருத்துகள்

கருத்துரையிடுக