தயக்கம் என்னும் தடைக்கல்!

சிந்தித்து பார்க்கையில் 
சிக்கலேதும் இருக்கவில்லை 
கடித்து தின்னும் 
அரக்கனாகவும் தெரியவில்லை 
முதல் வார்த்தைக்கே சுட்டு வீழ்த்தும் 
தமிழ் படத்து வில்லனாயும் புலப்படவில்லை
மூச்சு விட்டாலே முறைத்துப்பார்க்கும் 
மூர்க்க குணமும் காணவில்லை
இருந்தும் 
ஒரு வார்த்தை கேட்க 
ஓராயிரம் முறை யோசிக்க வைக்கும் 
இந்தத் தயக்கம் என்னும் தடைக்கல் !


கருத்துகள்