ஏழாம் அறிவு பற்றிய எனது அறிவிற்கு எட்டிய கருத்து !


அந்த வாரம் ஊருக்கு போக வேண்டி இருந்தது. ஆத்தாவின் கண் அறுவை சிகிச்சை முடிந்திருந்த காரணத்தால் அவர்களை நலம் விசாரித்து வர. 

எனக்கு தெரியும் எப்படியும் ஞாயிறு முழுவதும் வெட்டியாக தான் கழியும். ஏதேனும் பண்ணலாமே ?!! எனது அத்தை மகள் கல்லூரி விடுமுறையில் வீட்டில் இருந்தால். ஆஹா ! அருமையான யோசனை. படம் போகலாம். ஆக, ஞாயிறு அன்று மதியம் படம் போவது என முடிவு செய்தாயிற்று ! அதே தான். இப்படத்தை பற்றிய எனது சிறு கருத்து. :) 

தமிழ் படங்களை அவ்வளவாக நான் பார்க்க போக மாட்டேன். வித்தியாசமாக இருக்கிறது என்று சொன்னாலே என்னை நீங்கள்  தியேட்டர்களில் பார்க்க முடியும். 

ஆறறிவிற்கு எட்டிய கதைகளை பேசாமல் ஏழாம் அறிவு கதைக்கு வருவோமா? அப்பபோ பூக்கும் குறிஞ்சி மலர் போல, அப்பபோ வித்தியாசமான கதையில் வருகிற படங்களில் ஒன்று இது எனலாமா ? 

நல்ல கதை. போதிதர்மர்- ஒரு தமிழர். பல கலைகளில் சிறந்து விளங்கியவர். சீனா மக்களால் போற்றபடுபவர். அவரை பற்றி தமிழ் மக்களுக்கு, இந்திய மக்களுக்கு தெரிவிக்க எடுத்த படம். நல்ல கரு. 

இன்றைய மக்களுக்கும்,குழந்தைகளுக்கும்  தமிழ் வரலாறு, சிறப்புகளை ஆராய ஒரு ஆர்வம் ஏற்படுத்தும் கதை.

அதில் வந்த ஒரு கட்சி பற்றி சொல்லியே ஆக வேண்டும். ஸ்ருதி ஹாசன் தனது project பற்றி தமிழில் விளக்க வாயெடுத்த போது, சுற்றி இருந்த பெரிய ஆட்கள் உச்சு கொட்டுவார்களே ? அது தான் பல தமிழர்கள் பெருமை என்று எண்ணி பண்ணி கொண்டுள்ளார்கள் என எண்ணுகிறேன்.மாறலாம் இனியேனும். [ஸ்ருதியின் தமிழ் பற்றி என்னிடம் கேட்க வேண்டாம் :P ] 

மசாலா துகள்கள் இல்லாமல் எடுக்க முயற்சித்திருக்கலாம். ஸ்ருதி-கும் சூர்யா-கும் அடிக்கொரு பாட்டு தேவையில்லையோ என்று தோன்ற வைத்தது.

அங்கங்கே அரசியலும் எட்டி பார்த்திருந்தது. அது கிடக்கட்டும். எங்கே தான் இல்லை அரசியல். :P 

அது சரி  இல்லை, இது சரி இல்லை என்று கூறுவதை விட்டு, தமிழ் நாகரிகத்தை பெருமைகளை எடுத்துரைக்கும் படமாக கொண்டு பாராட்டினால்  இன்னும் நான்கு தயாரிப்பாளர்கள் முன்வருவார்கள் நம்மை பற்றி இயக்க என்பது எனது கருத்து.

மூலிகை வைத்தியம் இன்றைய அறிவியலை காட்டிலும் மேம்பட்டிருந்தது நம் தமிழகத்தில்!
வீரம் வளர்க்க பல கலைகள் நிரம்பியிருந்தது நம் தமிழகத்தில்!
மற்றவருக்கு கற்றுக்கொடுக்கும் அளவுக்கு கல்வி இருந்தது !

நம்முள் இருந்த இவிடயங்களை நாம் உணர்ந்திருக்கவில்லை. இவற்றை தூண்டி விட முடியும் என்கிறார் திரையில் தோன்றிய போதிதர்மர். 

உணர்வோம் ! வளர்வோம் ! உணர்த்துவோம் ! :) :)

பாராட்டலாம் இப்படத்தின் பங்காளர்களை. மேலும் இத்தகைய முயற்சிகள் வர எதிர்பார்ப்பு, மசாலாக்களை குறைத்து! B-)

[வரலாறு அப்படியே சொல்லபட்டதா என்றால் தெரியவில்லை ! ஆனால், அதை ஆராயவேணும் இப்படம் தூண்டும் ! ;) ]


கருத்துகள்