மருதமலை அனுபவம் !


கோவிலுக்கு போவது தெய்வீக அனுபவம் ! 
அடிக்கடி போய் 
கடவுளை தொந்தரவு செய்ய
விருப்பமில்லை எனக்கு ! 
அன்று போய் 
ஒரு வணக்கம் சொல்லி வரலாம் 
என்று புறப்பட்டேன் என் இனிய தோழிகளுடன் ! 

அவர்களை பற்றி கேளுங்களேன் ! 
ஒவ்வொருத்தியின் குணமும் ஒன்று ! 

ஒருத்தி அமைதியின் மறு உருவம் ! 
நம்மை அடிக்க வேண்டும் போல் தோன்றினாலும் வாய் திறந்து சொல்ல மாட்டாள் !

இன்னொருத்தியோ வாய் திறந்தால்
காத தூரம் போன பின்பு தான் நிறுத்துவாள் !
நிறைய பேசுபவள் !

இன்னொருத்தி இருவருக்கும் நடுவே
சிவனே என்று இருப்பவள் !
துறு துறு திரு திரு பெண்ணவள் !

மூவரும் அதிகாலை மலை மீது
நடக்கிறோம் !
கதைகள் பல காற்றில் அடிபட்டது
அப்போது !

பட படவென்று பறந்து போய்
மூன்று யு வளைவுகள் இருந்த
வரிசையில் வாயடித்த படி
காத்திருந்தோம் கடவுளின் திருமுகம் காண !

கண்டோம் கண்டோம் !
முழு அலங்காரத்தோடு மன நிறைவோடு
ஒளி நிரம்பிய கருவறையில்
அரோகரா ஒலிக்கிடையில் !

முடிந்தது முருகனிடம் வேண்டுதல் !
இப்போது எங்களுக்கு பசியின் தூண்டுதல் !

அங்கு சுற்றி இருந்த கடைகள்
மொத்தத்திற்கும் வாடிக்கையாளர் நாங்களே !
இளநீர் தாகம் தீர்த்தது!
எலந்தவடை எனது பால்ய நினைவுகளை உயிர்ப்பித்தது !
மாங்காய் வித விதமாய் முக பாவங்களை அளித்தது !
பொறி, பஞ்சாமிர்தம்,பனங்கற்கண்டு என
எல்லாம் பையை நிரப்பிற்று !
கிளி ஜோசியம் பார்த்து
ஜோசியக்காரரின் பையும் நிரம்பிற்று !

எல்லாருக்கும் காட்ட வேண்டாமா
எங்களின் குதூகலம் எப்படியிருந்ததென்று !
புகை படம் நான் உதவுகிறேன்
ஊருக்கு உரைக்க என்று சொல்ல
தொடங்கியது அங்கங்கு இருக்கும்
பாறைகளை இருக்கையாக, தோழனாக, நிழற்குடையாக
கேமரா விற்குள் பிடித்தடைக்கும் வேலை !

தெய்வீக அனுபவம் மனதை நிறைத்தது
பெண்களை எங்கும் பயமின்றி செல்ல தயங்க வைக்கும்
சில கேடு கேட்ட ஆண்கள் கண்ணில் பட்டதை தவிர !


கருத்துகள்