மறந்து விட்டோம் மனிதத்தை!!

பக்கத்து வீட்டில் இருபவளுக்கும் பிரச்னையா ?
ஓடி போய் உதவி செய்தார்கள் !
என்ன ஏதென்று
நலம் விசாரித்தார்கள் அன்று !

அழுது கண்கள் சிவந்து போயிருந்தாலும்
எந்த serial ஐ பார்த்தாய்
என கேலி
செய்யுது உலகம் இன்று !

தினமும் மாலை நேரம் சந்தித்து
சொந்த கதை அந்த கதை
என பேசி மகிழ்ந்தார்கள் அன்று !

எந்நேரமும் வீட்டுக்குளே கிடந்து
நான் உங்க பக்கத்துக்கு வீடுங்க என்றால்
கதை விடுகிறாயா என்கிறார்கள் இன்று !

அன்று பொது சொத்தாய் இருந்தது
நம்பிக்கை பாசம் நேசம் !

இன்று
நம்பிக்கை அலுவலகத்தில் !
பாசம் வீட்டுக்குள் !
நேசம் நம் பணத்தின் மீது !

மறந்து விட்டோம் மனிதா மனிதத்தை !
நினைவு படுத்தி கொள் !
தொலைந்து போகும் முன் !


கருத்துகள்