காற்றோடு பேசிய கவிதை!

காற்றோடு கவிதை பேசிக்கொண்டிருந்தேன் நேற்று !
தென்றலாய் எனது கூந்தலோடு 
ஓடிப்பிடித்து விளையாடி கொண்டிருந்தது !
பிடித்து நிறுத்தி கேட்டேன்
'வரும் வழியில் நீ அள்ளி வந்தது என்ன?' என்று !

பூக்களாய் சிரித்து விளையாடிய சிறு பிள்ளைகள் 
வெள்ளை மனம் என்றால் என்ன என்பதை நினைவுபடுத்த !

மான் போல் துள்ளி ஆடிய பூவையர்கள் 
மகிழ்ச்சி என்பது என்ன என்று காட்ட ! 

மாலை நேரத்தில் களைப்போடு வந்தாலும் 
பிள்ளைக்கு முறுக்கும் மனைவிக்கு மல்லிகை பூவும்
வாங்கி போன கணவன் குடும்பம் குதூகலம் என்று சொல்ல !

சொல்லி கொண்டே போனது பலப்பல விஷயங்களை !
'அடுத்து எங்கு செல்கிறாய்?அங்கு என்ன சொல்வாய்?'
என்று கண்ணடித்து கேட்டேன் 
'ஒரு மின்னல் என்னை தாக்கியது' என்பேன் என்றது ! :P








கருத்துகள்