பூனைக்கும் ஒரு காலம் வரலாம் !
அன்று காலையும் என்றும் போல தான் விடிந்தது. வார நாட்கள் எப்பொழுதுமே monotonous - ஆக தான் போகும். எப்ப தான் வெள்ளி வரும் என்ற எதிர்பார்ப்போடே ஒவ்வொரு நாளும் போகும். அதுவும் கல்யாணம் ஆன பிறகு பொறுப்பு வந்து மொத்தமாக monotonous செய்து விட்டது நாட்களை.
எழுந்து சோம்பல் முறித்தவாரே மணியை பார்த்தேன். ஏழரை. அட.. நேரமாகி விட்டது. பையன வேற காலேஜ் ல விடனும். இந்த sid கு எப்போ தான் பொறுப்பு வருமோ ?!! கல்யாணம் ஆகி 20 வருஷம் ஆகுது. பொறுப்பா ஒரு 7 மணிக்காவது சுடு தண்ணி வெச்சுட்டு எழுப்பி விட வேண்டாமா ??!!
கடுப்போட ஹால்- குள்ள போய் பையன் என்ன பண்றான்னு எட்டி பார்த்தேன். அவன் வேக வேகமாக முடிக்காத assignments -ஐ எழுதிட்டு இருந்தான். அடுப்படியில இருந்து விசில் சத்தம் கேட்டது. இன்னும் சமையல் வேலைய முடிக்கல.
"Sid , என்ன டா இன்னும் cooking முடிலையா ? டைம் ஆய்டுச்சு செல்லம் ! "
"இரு மா! சாப்பாடு விசில் வந்ததும் எறக்கி வெச்சிட்டு வந்துடறன்! நீ போய் குளிச்டு! நா துணியெல்லாம் தேச்சு வெச்சுதரன் அதுக்குள்ளே ! "
சரி ! இவன் இப்படி தான் ! குளிக்கலாம்னு போன அங்க ஹீட்டர் போடல !
"Sidddddddd !!!!!!"
"என்ன மா ???"
"என்ன ஹீட்டர் போடல !!?? ", கடுப்போடு கத்தினேன் !
"ஒரு நாள் பொறுத்துக்க மாட்டியே! அத நீ தான் போட்டுகிட்டா என்ன ?", என்ற வாறே அவன் அடுப்படியில் பாத்திரங்களை உருட்டுவது கேட்டது!
ஒரு நாள் தானே பொறுத்து கொள் என்று மூளை சொன்னாலும் அவன் என்ன வேல பண்ணிட்டு இருக்கான் என்று மனது திட்டியது ! திட்டியவாறே குளித்து முடித்து வெளியே வந்து பார்த்தால், நல்ல வேலை துணிகளை தேய்த்து வைத்திருந்தான் ! இல்லாவிடில் அவனுக்கு இன்று நல்ல நாளாய் இருந்திருக்க வாய்ப்பு இல்லை.
Dining table-இல் சுட சுட இட்லி தயாராய் இருந்தது. மணி எட்டே முக்கால். ரசித்து சாப்பிட நேரமில்லை. இரண்டு இட்லி ஐ அவசர அவசர மாக உள்ளே தள்ளி கொண்டே எனது பையனை தேடினேன் !
"அடேய் வினு ! வாடா ! நேரமாகுது ! ",என்ற வாறே போய் பைக் ஐ ஸ்டார்ட் செய்தேன் !
அவன் முகத்தை தொங்க போட்டுக்கொண்டே வந்தான் ! என்னமோ நடந்திருக்கு காலேஜ்-ல!
"என்ன டா விஷயம் ! எதாவது பிரச்சினையா காலேஜ்-ல??", அவன் கண்களை பார்த்தவரே கேட்டேன். தலையை குனிந்து கொண்டான்.
"சொல்லு டா! பரவால்ல! "
"இல்லம்மா ! காலேஜ்- ல பொண்ணுங்கல்லாம் ரொம்ப கிண்டல் பண்றாங்க அம்மா. வெளக்கென்ன தலையா, ஜிப்பா சட்ட- ன்னு ஓட்டறாங்க அம்மா ! :( தனியா பஸ் ஸ்டாப் ல வெயிட் பண்ண முடில ! பார்க்குற பார்வையே செரி இல்லமா!நீ ஒரு தடவ வந்து பிரின்சிபால்- அ பாத்துட்டு வந்துடேன் ! "
அழுகாதது ஒன்னு தான் மிச்சம்.
"சரி டா ! நாளைக்கு ஆபீஸ் போகறக்கு முன்னாடி வரேன் ! ", என்ற படியே வண்டியை ஸ்டார்ட் செய்த பொது என்னையறியாமல் ஒரு புன்னகை எனது உதட்டில் இருந்தது.
"முப்பது நாற்பது வருஷத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணா இருந்தா ஆயிரம் பிரச்சின ! இன்னிக்கு இப்படி??!!",என்று நினைத்த படியே வினு விடம் விடை பெற்று ஆபீஸ்-ஐ நோக்கி வண்டியை செலுத்தினேன் !
Good d..
பதிலளிநீக்குயானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்..
பூனைக்கு ஒரு காலம் வந்தால் யானைக்கும் ஒரு காலம் வரும்..
ipdi maari maari poi kite irundhaa, epo dhan naama equal aagaradhu??
Athu equal aah thaan aaganum de.. this is just my karpanai ! I do not want the above scene anytime anywhere, but want every guy who behaves mean, to understand how it feels being a girl! :P ;)
பதிலளிநீக்குReally nice..!! But I think this may happen one day.!
பதிலளிநீக்கு;) :) lets see.. :D :D
பதிலளிநீக்கு