காத்திருத்தல் ~
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணிக்கு
ரதம் போல வந்து சேரும் பேருந்து !
வழி மேல் விழி வைத்து
தன் ரதிக்காக காத்திருக்கும் காதலன் போல
நானும் காத்திருப்பேன் என் ரதத்திற்காக !
கடிகார முள்ளோ மெது மெதுவாய்
தடிஊன்றி நடந்து செல்லும் !
டிக் டிக் என்ற அதன் காலடிகள்
நான் தான் தாலாட்டு என்றென்னை வாட்டும் !
காத்திருந்து கண்கள் பூத்து போய் விடும்
கேள்வி பட்டிருக்கிறேன் !
என் ரதத்திற்காக காத்து என் கண்களோ
பூத்து வாடி காய்ந்தே போய் விடும் !
அட .. அதோ வருகிறது பேருந்து !
வாசலிலே வரவேற்க வாழை மரம் இருப்பது போல்
பேருந்து வாசலிலே தள்ளி கொண்டு பயணிகள் வந்தால்
அப்பொழுது புரியும்
காத்திருத்தலின் கொடுமை என்னவென்று !
இந்த சாம்ராஜ்யம் தங்களது இளவரசி என்பது போல்
காற்றை மட்டுமே இருத்தி கொண்டு பேருந்து வந்தால்
மனதுக்குள் சீட்டி பறக்கும்
காத்திருத்தலின் அருமை புரியும் !
கருத்துகள்
கருத்துரையிடுக