இரு தலைக் கொள்ளி எறும்பு !!

இரண்டில் ஒன்று தொடு - என்று
விளையாடி வென்று முடிவெடு 
என்றார் சிறுபிள்ளைத்தனமாக !! 

ஒன்று தன் மகிழ்ச்சி!! 
மற்றொன்று அடுத்தவர்  மகிழ்ச்சி !! 

இரண்டுமே மிகத் தேவை!
ஆனால் 
கொடுக்கப்பட்டது ஒரு வாய்ப்பு !!

இப்படித் தான் தவிக்குமோ 
இரு தலைக் கொள்ளி எறும்பு ??!!


கருத்துகள்