தொலைதல் சுகமாவது எப்போது ?



போரும்  காதலும்
பெண்டிர்  போற்றும்  ஆண்களும்
ஆண்கள்  மதிக்கும்  பெண்டிரும்
சமயோசிதமும்
சன்றான்மையும்
வீரமும்
சுற்றித்  திரியும்
வரலாற்று உலகுக்குள் !

அண்டாகாகசம்   அபுகாகசமும்
மந்திரக்கோல்களும்
மறைந்து  தோன்றும்
மாயாவிகளும்
தீயைக்   கக்கும் டிராகன்களும்
நடக்கும்  மரங்களும்
பேசும்  செடிகளும்
மயக்கும்
மாய  உலகுக்குள்  !

h + h + o நீரென  மாறியும்
மின்னியல்  காந்தவியல்
தினச்  செய்தியாகவும்
இருப்பிடம்  ஆய்வுக்   கூடமெனவும்
வேற்று  கிரகமும்
விந்தை  மனிதர்களும்
நண்பர்கலெனத்
தோன்றும்
அறிவியல்  உலகுக்குள்  !

பட்டாம்பூச்சிகளும்
நீயும்  மட்டும்  இருக்க
மகிழ்ச்சி  விட்டுப்போகாத
என்  கனவு  உலகத்துக்குள்  !!

இப்படித்   தொலைந்து  போகத்தான்
எத்தனை உலகங்களை
ஸ்ரிஷ்டிக்கிறது
மனது  !!

கருத்துகள்