நான் ! அவன் !! பயம் !!!
நான் ரசிக்கிற கவிதைகள்
நான் பிடிக்கிற புகைப்படங்கள்
நான் வியக்கிற மனிதர்கள்
நான் பார்த்ததும் புன்னகை தரும் நாய்க்குட்டி
நான் கண்ணடிக்கும் குட்டி பாப்பா
நான் ஆடும் ஆடல்கள்
நான் பாடும் பாடல்கள்
நான் தீர்க்கும் புதிர்கள்
நான் படிக்கும் புத்தகங்கள்
நான் தீட்டும் காகிதச் சித்திரங்கள்
நான் பார்த்து பார்த்து சிரித்து ரசிக்கும் திரைச் சித்திரங்கள்
நான் கட்டிய மணல் வீடுகள் , காகிதக் கப்பல்கள்
நான் நடந்து மகிழ்ந்த வயல்கள்
இப்படி எனக்குப் பிடிக்கும் என்ற இவைதான்
நான் !
அதற்காகத்தான் கேட்கிறேன்,
நான்-அற்றவனை கண்டால் பயப்படுவேனோ மாட்டேனோ ??!!
கருத்துகள்
கருத்துரையிடுக