முகமூடி விலை குறைவா?

முன் சிரித்துப் பின் பதுங்கும்
முகமூடி மனிதர்கள்
பல பேரை காண்கிறேன் நான்!
நண்பனாம் தோழியாம்
சொல்லி சொல்லி மகிழ்கிறார்
அழ ஒரு தோள் வேண்டும்
சொல்லாமல் மறைகிறார்!
கூடத்தான் நடந்தார்கள்
இக்காட்டுவழி பாதை தனில்
கண் முழித்துத் தேடிப்பார்த்தேன்
கானல் போன்ற கனவுலகில்!
விளிக்கிறேன் விழிக்கிறேன்
பின்பு ஒருக்களித்து படுக்கிறேன்
முகமூடி விலை வெகு குறைவு போலும்
என்றெண்ணியபடி!
என் வசமும் ஒன்றிருந்ததைத்தான்
முறறிலும் மறந்திருந்தேன்!

கருத்துகள்

  1. என் வசமும் ஒன்றிருந்ததைத்தான்
    முறறிலும் மறந்திருந்தேன்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது உண்மைதானே ! நாம் எல்லாரும் ஒரு முறையேனும் முகமூடிக்குள் செல்லத்தான் விழைகிறோம் ! :)

      நீக்கு

கருத்துரையிடுக