காத்திருக்கும் காத்திருத்தல் !
அமெரிக்கா மகனுக்காக
தன் வீட்டு திண்ணையில்
யாருக்கும் இடம் தராமல்
காத்திருக்கும் முதியவள் !
ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு
யுகமாகிப் போகும் நொடிகளில்
நினைவுகளை வெளிசெல்ல விடாமல்
காத்திருக்கும் காதலன் !
படாத பாடு பட்டு
எழுதி முடித்த பரிச்சை
தரப்போகும் ஆச்சரியங்களுகாக
காத்திருக்கும் மாணவி !
கால் கட்டு கை கட்டு என்று
எல்லாரும் பறந்தாலும்
யுகம் குறைக்கும் தன்னவனுக்காக
காத்திருக்கும் இளம்பெண் !
காலையில் தயிர்சோறு இட்டுவிட்டு
எட்டு மணிநேர வேலைக்காக
தன்னை வீட்டிலடைத்து சென்றவனுக்காக
காத்திருக்கும் நாய்க்குட்டி !
நாள் முழுதும் கதிரால் வாடி
எட்டி எட்டி பார்த்து
கதிரவனை வர சொல்லி
காத்திருக்கும் அல்லி !
இப்படிதான் காத்திருத்தல் பலரிடமும்
காத்து கொண்டுள்ளது
தன் விடுதலைக்காக !!
தன் வீட்டு திண்ணையில்
யாருக்கும் இடம் தராமல்
காத்திருக்கும் முதியவள் !
ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு
யுகமாகிப் போகும் நொடிகளில்
நினைவுகளை வெளிசெல்ல விடாமல்
காத்திருக்கும் காதலன் !
படாத பாடு பட்டு
எழுதி முடித்த பரிச்சை
தரப்போகும் ஆச்சரியங்களுகாக
காத்திருக்கும் மாணவி !
கால் கட்டு கை கட்டு என்று
எல்லாரும் பறந்தாலும்
யுகம் குறைக்கும் தன்னவனுக்காக
காத்திருக்கும் இளம்பெண் !
காலையில் தயிர்சோறு இட்டுவிட்டு
எட்டு மணிநேர வேலைக்காக
தன்னை வீட்டிலடைத்து சென்றவனுக்காக
காத்திருக்கும் நாய்க்குட்டி !
நாள் முழுதும் கதிரால் வாடி
எட்டி எட்டி பார்த்து
கதிரவனை வர சொல்லி
காத்திருக்கும் அல்லி !
இப்படிதான் காத்திருத்தல் பலரிடமும்
காத்து கொண்டுள்ளது
தன் விடுதலைக்காக !!
கருத்துகள்
கருத்துரையிடுக