எங்கள் வீட்டு பூனைக்குட்டி

எங்கிருந்தோ வந்தாள் அவள்.. நன்றாக நினைவில் உள்ளது. அவளாகவே எங்கள் வீட்டுக்கு வந்தாள்.
நாங்கள் அவளை துரத்தி விடவில்லை. தயிர் சாதமும் பாலும் தந்தோம். பின், எங்களுள் ஒருவளாகி விட்டாள்.
என்னோடும், என் தங்கையோடும் சேர்ந்து தோசை கூட சாப்பிட ஆரம்பித்து விட்டிருந்தாள். இவள் இனத்தவர் தோசை கூட சாப்பிடுவார்களா என்ற கேள்வி இன்னும் என்னுள் உள்ளது.
நானோ என் தங்கையோ இருந்தால் போதும், எங்கு போனாலும் எங்கள் காலுக்குள்ளே தான் சுற்றுவாள். உட்காந்து இருக்கையில் பக்கத்திலேயே இருப்பாள். அவள் தலையால் கையைத் தேய்த்துத் தேய்த்து தடவி விட சொல்வாள். 
அவள் தூங்குவதைப் பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும். மிக அழகாகத்  தூங்குவாள் அவள். வாய்ப்பு கிடைத்தால் எனது அல்லது என் தங்கையின் மடியே மெத்தையாக இருக்கும்.

பூனைக்  குட்டி அவ்வளவு பாசமாக இருக்க முடியும் என்பதை நிரூபணம் செய்தவள் .. ஒரு நாள், எதோ காரணத்தால் மறைந்து போனாள்.. எங்கள் கண்களில் தென்படாமல்.. 

She could lighten the mood, however troubled we were .. Such a great pal.. She will be remembered forever..

கருத்துகள்