நான் கிடைப்பேனா??
பலப்பல நாட்கள் இங்கே!
முடிந்து போக வேண்டாத
சிறிய நாள்
சிறிய நாள்
இரவும் உறக்கமும் தேடியபடியோடிய
மிக நீளமான நாள்
மிக நீளமான நாள்
கண்ணிமை மூடித் திறந்தது போல்
மாயமாய்ப் போன நாள்
மாயமாய்ப் போன நாள்
யாரையோ எண்ணியபடி
பகல்க்கனவாய் கரைந்த நாள்
பகல்க்கனவாய் கரைந்த நாள்
அம்மாவிடம் கோப்பட்டு
குழம்பித் தவித்த நாள்
குழம்பித் தவித்த நாள்
குறுக்கும் நெடுக்குமாய் நடந்தபடி
பாடல்களுள் தொலைந்த நாள்
பாடல்களுள் தொலைந்த நாள்
அதே நாட்களைத்தான்
கடந்து நடக்கிறேன்
இன்றும்
கடந்து நடக்கிறேன்
இன்றும்
என்னைத் தேடிக்கொண்டே !!
கருத்துகள்
கருத்துரையிடுக