அழுதல்!

தாங்க முடியாத விடயம்
நடந்து விட்டிருந்தது!
அழாதே!
கூடவே கூடாது!
பல சாலிகள் அழுவதில்லை!
பரவாயில்லை!
சரியாகிவிடும்!
கடந்து போய்
மற்ற வேலைகள்
நடக்கலாயின!
யோசனைகள்
நினைவுகள்
பல வேலை என
நாளும் முடிந்தது !
இரவு பத்து மணி !
கொடியில் காயப்போட வேண்டிய
ஈரத்துக்கு மாறியது
தலையணை !
பல இதயங்களில்
இல்லாத அதே
ஈரம்? ஹும்!
விடிந்தது!
ஆம்! சரியாகிவிடும்!
எனது பலம் கூடியிருந்தது !

கருத்துகள்