சொல்லப்படாத கதைகள்

பார்த்த நொடியே
கண்கள் படபடக்கும்
இதயம் தடதடக்கும்
எல்லாம் மாயமாகும்
ஆனால்,
என்னைத் துப்பிவிடு எனத்
தொண்டைக் குழி வரை
படு வேகமாய் வரும்
வார்த்தைகள்
சொல்லப்படாத கதைகளாய்
மடிந்தே போகின்றன
இன்றும்!!

கருத்துகள்