நான் காணாத நீ !!

உன் சிரிப்பு தான்
முதல் அறிமுகம் எனக்கு!
நிறைய உரையாடல்கள்,
காலத்தோடு கிடைத்த உதவிகள்,
அதட்டலோடு ஆறுதல்கள்,
பிடித்தவை பரிமாற்றங்கள்,
இன்னும் மாறிப்போகாதிருந்த
அதே சிரிப்பு !
இவற்றிற்கும் அப்பாற்பட்ட
ஒரு நீ இருப்பதாய்ப் பயக்கிறேன்!
நான் பயக்கும் உன்னை
நான் காண்பதற்குள்
நான் கண்டிருந்த நல்லவனாகவே
நீ காணாமல்  போய்விடு !!

கருத்துகள்