பெண்ணிவள் போர் குணம் படைத்தவள் !



இவள் செய்த பிழையென்று சொல்வதா ? 
பிறர் செய்த சதியென்று  சொல்வதா?
இத்திரு நாட்டில் உதித்து விட்டாள் !
போர் குணம் படைத்த இவள் !

பிறந்த நாளன்று
முகம் கூட பார்க்காமல் 
தூக்கி வீசிய அப்பன் 

கண் விழித்து 
தன் உயிர் காணாது 
பிதற்றிய அவள் அன்னை 

இவள் செய்த பிழையென்று சொல்வதா ? 
பிறர் செய்த சதியென்று  சொல்வதா?
இத்திரு நாட்டில் உதித்து விட்டாள் !
போர் குணம் படைத்த இவள் !

இதழ் விரிக்கவும் இல்லை 
இந்த இளம் பூ மொட்டு !
கண்ணடிகளால் கருகி தான் விடுவாளோ ?
வீரி இவள் சாட்டை சொடுக்கி 
விரட்டி விட்டாள் அவர்களது   கண் பிடுங்கி !

இவள் செய்த பிழையென்று சொல்வதா ? 
பிறர் செய்த சதியென்று  சொல்வதா?
இத்திரு நாட்டில் உதித்து விட்டாள் !
போர் குணம் படைத்த இவள் !

தன் கையே தனக்குதவியை தாண்டி 
பிறருக்கும் உதவி என்பாள் இவள் !
பெருக்கெடுக்கும் பொறாமை !
பெண்ணிவள் எனக்கு மேலா ?
நசுக்கு அவளை 
நச்சுப் பாம்புகள் சுற்றி வளைக்கும்!
வெட்டி வீசி விரைந்து செல்வாள் !

இவள் செய்த பிழையென்று சொல்வதா ? 
பிறர் செய்த சதியென்று  சொல்வதா?
இத்திரு நாட்டில் உதித்து விட்டாள் !
போர் குணம் படைத்த இவள் !
 மகிழ்ச்சி ! அவளவன் வந்து விட்டான் 
இனி எனக்கு விடுதலை என்றிருப்பாள் 
இது உனக்கு கல் சிறை என்பானவன் !
சுக்கு நூறாய் உடைந்து 
சிதறி கீழ் வீழ்வாள் இவள் !

விழுந்தவுடன் சொல்வார்கள் !

இவள் செய்த பிழையென்று சொல்வதா ? 
பிறர் செய்த சதியென்று  சொல்வதா?
இத்திரு நாட்டில் உதித்து விட்டாள் !
போர் குணம் படைத்த இவள் !


கருத்துகள்

  1. பெண்ணை தெய்வமாக கொண்டாடிய இத்திருநாடு,
    பெண் சிசுவென்றால் கருவறையயையே கல்லறையாய் மாற்றிகொண்டிருக்கிறது. பெண்ணிற்கு நிகர்
    யாருமில்லை என மீண்டும் உலகமறிவது எப்போது !!!!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக