காதல் - கருப்பா, சிவப்பா?



காதலா?
அது எப்படி இருக்கும் ?
கருப்பா ? சிவப்பா ?
ஏதோ புனிதமானதாமே ?
வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்
உருளை உருளுமாமே ?
கனவுக்குள் மிதக்க வைக்குமாமே ?
காணும் கல்லிளெல்லாம்
கலை உருகுமாமே?
கேட்கும் ஒலியெல்லாம்
இசையாய் ஜொலிக்குமாமே?
பாடல்கள் ஆக்கப்பட்டதே 
தனக்காய்த் தோன்றுமாமே ?
அப்பாவின் திட்டுகள்
தாலாட்டுகள் ஆகுமாமே?
என்னமோ, என்னைத் தூக்கிக்
கொஞ்சும் போதெல்லாம்
இந்த அக்காள் பேசிச்சொல்கிறாள்!
எனக்கு ஒன்றும் புலப்படுவதில்லை!


கருத்துகள்

கருத்துரையிடுக