மது என்ன செய்வாள்??
நானும் ரொம்ப நேரமாக அவங்க ரண்டு பேரையும் பார்த்துட்டுதான் இருக்கேன். சரி சரி அப்படி பாக்காதீங்க. இன்னொருத்தர் வீட்டுல நடக்கறத எட்டிப் பார்க்கிறது தப்புதான். ஆனா இவங்க கதை ரொம்ப இன்ட்ரஸ்டிங். அதான். அடுப்பில் எண்ணெய் காய்ந்திருந்தது.அவள் சற்று எக்கி மேல் அடுக்கில் இருந்த கடுகு டப்பாவை எடுத்து, நாலு கடுகை வாணலியில் போட்டாள். அது பட படவென சத்தம் எழுப்பியது. அவன் படுக்கை அறையில் இருந்தபடி மடிக்கணினியைத் தட்டிக்கொண்டிருந்தான். சாப்ட்வேரில் வேலையாம். வொர்க் லைஃப் பாலன்ஸ் இல்லாம வேல பார்ப்பான் போல. தீடீரென தலையைப் பிடித்தபடி, படக்கென எழுந்தவன், சமையலறையை நோக்கி நடந்து செல்கிறான். பூனை போல பதுங்கியபடி மெதுவாய் அவளை நோக்கி நடக்கிறான். எனக்கு மனம் பதைக்கிறதே.இது வரைக்கும் அவங்களுக்குள்ள சண்டை எதுவும் இருக்கல தான். நான் சட்டென நினைவு திரும்ப, அவனைப் பார்க்கிறேன். அவன் அவள் இடுப்பைச் செல்லமாகக் கிள்ள, அவளோ அவன் கைகளுக்குள் பொய்க் கோபத்தோடு சுழன்று கொண்டுள்ளாள். சிரித்துக் கொண்டேன். "மது, தல வலியா இருக்குடீ. ஸ்ட்ராங்கா ஒரு காஃபி தாயேன்" "கொண்டு வரேன்! நீ ப...