இடுகைகள்

ஏமாற்றும் மனம்~

அடிக்கடி கண்ணில் பட்ட போது அட சே என்ன இது தொந்தரவு என்றெண்ணத்  தோன்றியது! இப்போது காணாமலே போனதும் மனம் அதையே தேடுகிறது!

சொன்னதை கேட்கும் மனம்

கூடாது கூடாது என்று சொன்னால்தான் நினைப்பேன் நினைப்பேன் என்று சொல்லாமல் சொல்லி அடம்பிடிக்குது  ! விட்டு விடு விட்டு விடு என்று பலமுறை கூறி விட்டேன் கேட்டுகொண்டதாய் தெரியவில்லை ! திரும்பி திரும்பி பார்க்காதே ஒன்றும் வேலைக்காகாது என்றேன் கண்கள் முன் நோக்கவில்லை ! சரி போனால் போகிறது இந்த ஒரு முறை மட்டும் என்றபடி 10 ரூபாயை எடுத்து கொடுத்து வங்கிக்கோ  ஐஸ் கிரீம் என்றதும் மனம் நான் சொன்னதை கேட்டு நடந்ததாய் தோன்றியது !!

காரணம் இல்லாத உணர்வுகள்

பார்ப்பது கிடையாது அடிக்கடி, பார்த்தாலும் பேசுவதை எண்ணி விடலாம் விரல் விட்டு ! யாரும் கந்தஷஷ்டி கவசம் போல ஒவ்வொரு காலையும் புராணங்கள் சொல்வதில்லை வீர செயல்கள் இவை என்று! எனக்கெனச் செய்த உதவிகள் முட்டை வடிவத்தையே காட்டச் செய்தன! இருந்தாலும் எனக்கு இவ்வளோ பிடிக்கும் எனச் சொல்ல தூண்டுது குழந்தை மனது!

கோணம்

என்னை பார்த்து நிறைய பேர் பயப்படுகிறார்கள் தன் மிக அருகில் வந்து விட்டு நகர்ந்து வளைந்து போய் விட்ட எறும்பு கூட்டத்தை பார்த்து சொன்னதாம் புலியை காணாத செம்மறி ஆடு !

Poetry Competetion and How I became a Cindrella!

It was my first poetry competition, that was held in my office. They gave the topic as "Rain". But there were no thoughts pouring like rain. Finally got a thread, out of which the poetry came out. Here is the poem/rhyme/lyrics, whatever it means to you ;) Rain That was a rainy day, Towards the school, on my way! Met a plant, it just smiled, Too big flower, but not so wild, "Why so happy?", it was me, "Took bath with some fresh water, you see!" That was a calf, I saw jumping, With small happiness, my heart was pumping, "Why so jumpy??",it was me, "Fresh and lively, that's how I feel!" Then, there came a small sparrow, Looked like it had lost the word "sorrow", "Flying with colors??",it was me, "Sprinkles of happiness that hit me!" Look at me, poor little Cindrella, I know, its time to fold my umbrella, That I have now found the prince of happiness, The rai...

Being a Listener or Questioner, Nor Both !!

The guy, who took the seminar was literally begging. "Anybody, please ask questions!!!" "Do you want any clarifications???" "Any queries!!??" There seem to come no response from the audience. He looked at the left hand-side audience and asked, "Anybody,questions???". Everybody were sitting like, "Anybody was screaming here???!!". After getting are-you-talking-to-me kind of response from the left side group, he turned his attention to the right hand-side audience. This time, he did not want to face the same reaction. So, he pointed out some person and asked, "Ask me a question. You must be having lots of questions. ". That guy, who was pointed out, started talking to his neighbor, though he had not talked to him earlier. See, this is the scene which we often watch,on seminar halls and office meetings.This can be called as "Listening Mode" of brain . If you think about it, this is a kind of mode, where onl...

குழப்பத்திலும் கவிதை தோன்றுமா ??

காலையில் ஒரே  மகிழ்ச்சி அருமையான ஒரு கவிதை தோன்றியது சேமித்து வைக்கவில்லை மாலையில் சேர்த்து படைத்து கொள்ளலாம் என்று! மாலை வருவதற்குள் சில பல நிகழ்வுகள் பல  பல விமர்சனங்கள் வாள் சண்டையிட்டு கொண்டிருந்தன பல கேள்விகள் ! சிதைந்து போயிருந்தது  எனது  கவிதை ! எனக்குள் மோதி கொண்டிருந்த கேள்விகள் கொஞ்சம்  கொஞ்சமாய் எனது கவிதையை கிழித்து அழித்து கொண்டிருந்தன ! மிச்சம் இருப்பதையாவது படைப்போம் என்று மனதை தேற்றி கொண்டு  உட்கார்ந்திருந்தேன் மாலையை எதிர்நோக்கி !! அதற்குள் அழிந்து விடுவாயா என் கவிதையே!!