இடுகைகள்

தொலைதல் சுகமாவது எப்போது ?

படம்
போரும்  காதலும் பெண்டிர்  போற்றும்  ஆண்களும் ஆண்கள்  மதிக்கும்  பெண்டிரும் சமயோசிதமும் சன்றான்மையும் வீரமும் சுற்றித்  திரியும் வரலாற்று உலகுக்குள் ! அண்டாகாகசம்   அபுகாகசமும் மந்திரக்கோல்களும் மறைந்து  தோன்றும் மாயாவிகளும் தீயைக்   கக்கும் டிராகன்களும் நடக்கும்  மரங்களும் பேசும்  செடிகளும் மயக்கும் மாய  உலகுக்குள்  ! h + h + o நீரென  மாறியும் மின்னியல்  காந்தவியல் தினச்  செய்தியாகவும் இருப்பிடம்  ஆய்வுக்   கூடமெனவும் வேற்று  கிரகமும் விந்தை  மனிதர்களும் நண்பர்கலெனத் தோன்றும் அறிவியல்  உலகுக்குள்  ! பட்டாம்பூச்சிகளும் நீயும்  மட்டும்  இருக்க மகிழ்ச்சி  விட்டுப்போகாத என்  கனவு  உலகத்துக்குள்  !! இப்படித்   தொலைந்து  போகத்தான் எத்தனை உலகங்களை ஸ்ரிஷ்டிக்கிறது மனது  !!

மழை வேடிக்கை!!

படம்
கண்ணாடிக் காட்சிகளை மறைத்து கண்ணாடியை ரசிக்க  வைக்கும்  முத்துக்கள்! தூரத்து வானம் தூக்கியெறிய தரை விழுந்துமறையும் அழகிய  கோலங்கள்! வாடிப் போய்க் கிடக்கும்  வெண் அல்லி மலரிடம் காதலோடு பல  தீண்டல்கள்! தனக்கஞ்சிப்  பலர் மறைத்தெடுத்து  விரித்த ஆயுதமாம் குடையிடம்  மோதல்கள்! இப்படியாய்  வெயில் பேசாத பல கதைகளைக் காட்டிச் சிணுங்கும்  வான் மழை!

பயமும் கண்ணாம்பூச்சியும்

படம்
பயம் ஒரு ஒற்றுண்ணி! குற்றுயிரும் குலையுயிருமாய் கூடவேதான் சுற்றுவான் அவன்! அவனுக்கு சோறு போடவே சில மனிதர் உண்டு ! அவரிடத்தில் மட்டும் செல்லம் கொஞ்சிப் பெருத்தாடுவான்! மற்றவரிடத்தில்  அவனை  மறந்தும் ஒளித்தும், கராத்தேயும் குங்ஃபூவும் தெரியாத போதும் தைரியசாலியாகவே  நாம் வாழ்கிறோம் !

சொர்க்கமா? நரகமா?

அவன் செத்து விட்டிருந்தான் ! அவன் ஆவி அந்தரத்தில் பாலே ஆடிக் கொண்டிருந்தது ! பார்த்தான் அவன்.. துரத்தி அமுக்கி பிடித்து பின் வாசல் வழியாக செலுத்தி விட்டான் இழவு வீட்டுக்குள் ! அது திரும்பி வரும் ! வந்து அவனிடம் சொல்லும், அவன்  நல்லவனா ? கெட்டவனா ? செல்லப் போவது  சொர்க்கமா? நரகமா ? என்பதை !!!

பேய் படமும் சாவும்

படம்
ஏதோ திகில் படம் பார்த்து முடித்த மாதிரி இருந்தது  கண் முழித்த போதே. கனவா நிஜமா என்று விளங்கவில்லை. என்ன கருமமோ, கல்லூரிக்கு நேரமாச்சே என்று பதறியடித்து, எப்பவும் போல, கடைசி 5 நிமிடத்தை  தெய்வமாகக் கும்பிட்டு முடித்து,  பேருந்தைப் பிடிக்க ஓடி கொண்டிருக்கிறேன். நான் தேஜா. நேற்று இரவு எனது தோழி  கொடுத்த திகில் படம் ஒன்றை இரவு ஒரு மணி வரை கண் முழித்து பார்த்துக் கொண்டிருந்தேன். உடனே  நான் பேய் படம் பாத்தாலும் பயப்படாத பொண்ணு என்றெல்லாம்  நினைத்துக் கொள்ள வேண்டாம்.பயத்த வெளிக்காட்டிக் கொள்ளாமல் பேயையும் கிண்டலடித்துக் கலாயித்துப் படம் பார்க்கும் ஜாதி நான். திடீரென்று உணருகிறேன். பேருந்து நிறுத்தத்திற்கு ஓடி கொண்டிருந்த நான் இப்போது எங்கே ஓடுகிறேன் என்றே தெரியவில்லை. ஒன்றும் புரியாமல், கால்களை நிறுத்த முயல்கிறேன். நிற்க மாட்டேன் என்று எதோ திசையில் ஓடிகொண்டே இருக்கின்றன என் கால்கள். கண்கள் சுற்றும் முற்றும் பார்க்கின்றன. இடம் என்னவென்று புலப்படுகிறதா என்று மூளையிடம் கேட்கின்றன. குழப்பம். அங்கே ஒரு தூண் கம்பி தெரிகிறது கண்களுக்கு. ...

சிரிக்கும் இதழ்கள்

நிதம் பார்க்கும் முகங்களே திரும்பி கொள்ளும்  காலமிது !   என்றேனும்இடைவந்து வழி மறித்து   சிரித்து செல்லும் இதழ்கள் அன்றைய நாளை  வண்ணங்களால் நிரப்பித்தான்  மறைகிறது ! 

காத்திருக்கும் காத்திருத்தல் !

அமெரிக்கா மகனுக்காக தன் வீட்டு திண்ணையில் யாருக்கும் இடம் தராமல் காத்திருக்கும் முதியவள் ! ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு யுகமாகிப் போகும் நொடிகளில் நினைவுகளை வெளிசெல்ல விடாமல் காத்திருக்கும் காதலன் ! படாத பாடு பட்டு எழுதி முடித்த பரிச்சை தரப்போகும் ஆச்சரியங்களுகாக காத்திருக்கும் மாணவி ! கால் கட்டு கை கட்டு என்று எல்லாரும் பறந்தாலும் யுகம் குறைக்கும் தன்னவனுக்காக காத்திருக்கும் இளம்பெண்  ! காலையில் தயிர்சோறு இட்டுவிட்டு எட்டு மணிநேர வேலைக்காக தன்னை வீட்டிலடைத்து சென்றவனுக்காக காத்திருக்கும் நாய்க்குட்டி ! நாள் முழுதும் கதிரால் வாடி எட்டி எட்டி பார்த்து கதிரவனை வர சொல்லி காத்திருக்கும் அல்லி ! இப்படிதான் காத்திருத்தல் பலரிடமும் காத்து கொண்டுள்ளது தன் விடுதலைக்காக !!