இடுகைகள்

நவம்பர், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மருதமலை அனுபவம் !

கோவிலுக்கு போவது தெய்வீக அனுபவம் !  அடிக்கடி போய்  கடவுளை தொந்தரவு செய்ய விருப்பமில்லை எனக்கு !  அன்று போய்  ஒரு வணக்கம் சொல்லி வரலாம்  என்று புறப்பட்டேன் என் இனிய தோழிகளுடன் !  அவர்களை பற்றி கேளுங்களேன் !  ஒவ்வொருத்தியின் குணமும் ஒன்று !  ஒருத்தி அமைதியின் மறு உருவம் !  நம்மை அடிக்க வேண்டும் போல் தோன்றினாலும் வாய் திறந்து சொல்ல மாட்டாள் ! இன்னொருத்தியோ வாய் திறந்தால் காத தூரம் போன பின்பு தான் நிறுத்துவாள் ! நிறைய பேசுபவள் ! இன்னொருத்தி இருவருக்கும் நடுவே சிவனே என்று இருப்பவள் ! துறு துறு திரு திரு பெண்ணவள் ! மூவரும் அதிகாலை மலை மீது நடக்கிறோம் ! கதைகள் பல காற்றில் அடிபட்டது அப்போது ! பட படவென்று பறந்து போய் மூன்று யு வளைவுகள் இருந்த வரிசையில் வாயடித்த படி காத்திருந்தோம் கடவுளின் திருமுகம் காண ! கண்டோம் கண்டோம் ! முழு அலங்காரத்தோடு மன நிறைவோடு ஒளி நிரம்பிய கருவறையில் அரோகரா ஒலிக்கிடையில் ! முடிந்தது முருகனிடம் வேண்டுதல் ! இப்போது எங்களுக்கு பசியின் தூண்டுதல் ! அங்கு சுற்றி இருந்த கடைகள் மொத்தத்திற்க...

பட்டாம்பூச்சி பறக்றதுனா இதானா ?

கண் வழியாக புகுந்த பட்டாம்பூச்சி அவன் வயிற்றுக்குள் சிறகடித்துப் பறந்ததாம்  அவளை பார்த்ததும் ! 

உள்ளத்து உறவுகளும் பயமளிக்கும் விந்தை !

அதிக நெருக்கம் உள்ள உறவுகளில் பயமும் வந்து ஒட்டிகொள்கிறது! உடைந்து போனாலும் வலி ! பற்றி இருந்தாலும் வலி ! அது, பற்றி எறியும் நெருப்பினூடே பயந்து சாவும் பஞ்சைப் போன்றது ! நாம் நெருப்பானால் விலகி போகும் பஞ்சு சாம்பலாகி வலி கொடுக்கும்! நாம் பஞ்சானால் நெருப்பின் சூடு நம்மை சுட்டு பொசுக்கும் ! பயம் மறைய வலி குறைய இரண்டுக்கும் தேவை வெற்றிடம் நிரம்பிய இடைவெளி !

ஏழாம் அறிவு பற்றிய எனது அறிவிற்கு எட்டிய கருத்து !

அந்த வாரம் ஊருக்கு போக வேண்டி இருந்தது. ஆத்தாவின் கண் அறுவை சிகிச்சை முடிந்திருந்த காரணத்தால் அவர்களை நலம் விசாரித்து வர.  எனக்கு தெரியும் எப்படியும் ஞாயிறு முழுவதும் வெட்டியாக தான் கழியும். ஏதேனும் பண்ணலாமே ?!! எனது அத்தை மகள் கல்லூரி விடுமுறையில் வீட்டில் இருந்தால். ஆஹா ! அருமையான யோசனை. படம் போகலாம். ஆக, ஞாயிறு அன்று மதியம் படம் போவது என முடிவு செய்தாயிற்று ! அதே தான். இப்படத்தை பற்றிய எனது சிறு கருத்து. :)  தமிழ் படங்களை அவ்வளவாக நான் பார்க்க போக மாட்டேன். வித்தியாசமாக இருக்கிறது என்று சொன்னாலே என்னை நீங்கள்  தியேட்டர்களில் பார்க்க முடியும்.  ஆறறிவிற்கு எட்டிய கதைகளை பேசாமல் ஏழாம் அறிவு கதைக்கு வருவோமா? அப்பபோ பூக்கும் குறிஞ்சி மலர் போல, அப்பபோ வித்தியாசமான கதையில் வருகிற படங்களில் ஒன்று இது எனலாமா ?  நல்ல கதை. போதிதர்மர்- ஒரு தமிழர். பல கலைகளில் சிறந்து விளங்கியவர். சீனா மக்களால் போற்றபடுபவர். அவரை பற்றி தமிழ் மக்களுக்கு, இந்திய மக்களுக்கு தெரிவிக்க எடுத்த படம். நல்ல கரு.  இன்றைய மக்களுக்கும்,குழந்தைகளுக்கும்  தமிழ் வர...

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா ?

வீட்டு பாடம் எழுதாததற்கு     வெளியே  நிற்க  வைத்து  விட்டு அன்றைய பாடம்  முழுதும்  நடத்தி   வகுப்பு  முடிந்தபின்  உள்ளே  அழைத்து நாளைக்கும்  வீட்டு பாடம்  முடிக்கவில்லை ? நீ வெளியே   நான் உள்ளே என  விளையாடும்  வாத்தியார்  முட்டாளா இல்லை  பாடம்  எழுதாத  நானா ?

பெற்ற மனம் பித்து !

விசாரிப்புகள்   விளையாட்டாகவோ  வினயத்தோடோ   இல்லாமல் விசனத்தோடு  இருக்க  வேண்டுமென்பதை எப்படி  புரிய  வைப்பேன் கண்  அறுவை  சிகிச்சை  முடித்து வராத  உறவினரை  எதிர்பார்த்திருக்கும் எனது  ஆத்தாளிடம்!

தயக்கம் என்னும் தடைக்கல்!

சிந்தித்து பார்க்கையில்  சிக்கலேதும் இருக்கவில்லை  கடித்து தின்னும்  அரக்கனாகவும் தெரியவில்லை  முதல் வார்த்தைக்கே சுட்டு வீழ்த்தும்  தமிழ் படத்து வில்லனாயும் புலப்படவில்லை மூச்சு விட்டாலே முறைத்துப்பார்க்கும்  மூர்க்க குணமும் காணவில்லை இருந்தும்  ஒரு வார்த்தை கேட்க  ஓராயிரம் முறை யோசிக்க வைக்கும்  இந்தத் தயக்கம் என்னும் தடைக்கல் !