அன்று காலை விழித்ததும் நினைக்கவில்லை இன்று நான் என்னை புதிதாய் உணர்வேன் என்று. என்றும் போல விழித்த கண்கள் மூடிக்கொண்டன. 7 மணி என்ற போதும் எழலாமா வேண்டாமா என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டு இருந்தது மனம். அரை தூக்கத்தில் இருந்த என்னை பக்கத்துக்கு அறையில் இருந்து எழுந்து வந்து எனது தோழி எழுப்பினாள். அவளது அலுவலகத்தில் இருந்து வாரா வாரம் பக்கத்துக்கு தெருவில் உள்ள அரசு பள்ளிக்கு சென்று அவர்களுக்கு பாடம் கற்பிப்பார்கள். திடீரென அவள் என்னிடம் "நீயும் வாயேன் சௌமி" என்று கூறினாள். அட, நல்ல யோசனை. வீணாய் பொழுதை கழிப்பதை காட்டிலும் இது ரொம்ப நல்ல விஷயம் அல்லவா? பட படவென எழுந்து கிளம்பி விட்டேன். ஒன்பதே முக்காலுக்கு தயாராக நிறுத்தத்தில் போய் நின்று விட்டோம். பக்கத்துக்கு KR bakery -இல் ஒரு பப்ப்ஸ், ஒரு காபியோடு காலை உணவை முடித்து விட்டு அவர்களது organizer காக காத்திருந்தோம். அவர் வந்ததும் ஒரு cab -இல் அனைவருமாக பள்ளியை அடைந்தோம். அறிமுகங்கள் முடித்து, பள்ளிக்குள் சென்றோம். எங்களுக்கு ஆறாம் வகுப்பு. அவர்களுக்கு மணியின் அளவைகளை சொல்லி ...