இடுகைகள்

அக்டோபர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மது என்ன செய்வாள்??

படம்
நானும் ரொம்ப நேரமாக அவங்க ரண்டு பேரையும் பார்த்துட்டுதான் இருக்கேன். சரி சரி அப்படி பாக்காதீங்க. இன்னொருத்தர் வீட்டுல நடக்கறத எட்டிப் பார்க்கிறது தப்புதான். ஆனா இவங்க கதை ரொம்ப இன்ட்ரஸ்டிங். அதான். அடுப்பில் எண்ணெய் காய்ந்திருந்தது.அவள் சற்று எக்கி மேல் அடுக்கில் இருந்த கடுகு டப்பாவை எடுத்து, நாலு கடுகை வாணலியில் போட்டாள். அது பட படவென சத்தம் எழுப்பியது. அவன் படுக்கை அறையில் இருந்தபடி மடிக்கணினியைத் தட்டிக்கொண்டிருந்தான். சாப்ட்வேரில் வேலையாம். வொர்க் லைஃப் பாலன்ஸ் இல்லாம வேல பார்ப்பான் போல. தீடீரென தலையைப் பிடித்தபடி, படக்கென எழுந்தவன்,  சமையலறையை நோக்கி நடந்து செல்கிறான். பூனை போல பதுங்கியபடி மெதுவாய் அவளை நோக்கி நடக்கிறான். எனக்கு மனம் பதைக்கிறதே.இது வரைக்கும் அவங்களுக்குள்ள சண்டை எதுவும் இருக்கல தான். நான் சட்டென நினைவு திரும்ப, அவனைப் பார்க்கிறேன். அவன் அவள் இடுப்பைச் செல்லமாகக் கிள்ள, அவளோ அவன் கைகளுக்குள் பொய்க் கோபத்தோடு சுழன்று கொண்டுள்ளாள். சிரித்துக் கொண்டேன். "மது, தல வலியா இருக்குடீ. ஸ்ட்ராங்கா ஒரு காஃபி தாயேன்" "கொண்டு வரேன்!  நீ  ப...

விளையாட்டும் மறந்தோம்

பிளாஸ்டிக் பந்தோடு கால்ப்பந்து! எங்கள் தெரு பசங்களின் புது விளையாட்டு மோகம் ! எட்டிப் பார்க்கிறேன் நான்! தேங்காய்த் தொட்டி இட்லி மழை முடிந்த மாலைகளில், பட்டென தயாரான வண்டி நுங்கு சாப்பிட்ட வேலைகளில், கிடைத்த இடத்தில் பாண்டியாட்டம் அழகிய கூழாங்கல் பார்த்தால், தேங்காய் மட்டை கிரிக்கெட், நாலு பேர் சேர்ந்தால் நொண்டி, ஏழு பேர் சேர்ந்தால் கண்ணாம்பூச்சி! வேறு ?? அப்புறம்?? என்னவெல்லாம் செய்தேன்?? எனது பால்ய காலம் அத்தனையும் என் நினைவில் இருக்கவில்லை! நான் கால்ப்பந்தை ரசிக்க ஆரம்பித்திருந்தேன்!!

நான் காணாத நீ !!

உன் சிரிப்பு தான் முதல் அறிமுகம் எனக்கு! நிறைய உரையாடல்கள், காலத்தோடு கிடைத்த உதவிகள், அதட்டலோடு ஆறுதல்கள், பிடித்தவை பரிமாற்றங்கள், இன்னும் மாறிப்போகாதிருந்த அதே சிரிப்பு ! இவற்றிற்கும் அப்பாற்பட்ட ஒரு நீ இருப்பதாய்ப் பயக்கிறேன்! நான் பயக்கும் உன்னை நான் காண்பதற்குள் நான் கண்டிருந்த நல்லவனாகவே நீ காணாமல்  போய்விடு !!

நான் கிடைப்பேனா??

பலப்பல நாட்கள் இங்கே! முடிந்து போக வேண்டாத சிறிய நாள் இரவும் உறக்கமும் தேடியபடியோடிய மிக நீளமான நாள் கண்ணிமை மூடித் திறந்தது  போல் மாயமாய்ப் போன நாள் யாரையோ எண்ணியபடி பகல்க்கனவாய் கரைந்த  நாள் அம்மாவிடம் கோப்பட்டு குழம்பித் தவித்த நாள் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தபடி பாடல்களுள் தொலைந்த நாள் அதே நாட்களைத்தான் கடந்து நடக்கிறேன் இன்றும் என்னைத் தேடிக்கொண்டே  !!

சொல்லப்படாத கதைகள்

பார்த்த நொடியே கண்கள் படபடக்கும் இதயம் தடதடக்கும் எல்லாம் மாயமாகும் ஆனால், என்னைத் துப்பிவிடு எனத் தொண்டைக் குழி வரை படு வேகமாய் வரும் வார்த்தைகள் சொல்லப்படாத கதைகளாய் மடிந்தே போகின்றன இன்றும்!!