இடுகைகள்

2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சோகம் தீர்த்தல்!

ஆழ்ந்த சோகம் ! எழுதித் தீர்க்கலாம் என பேனாவும் காகிதமுமாய் தயாராகிறேன்! பேனா எழுத ஆரம்பிப்பதற்குள் கண்ணீர் அது முந்திக் கொண்டது ஈரமான காகிதம்! ஈரமான கண்கள்! யோசிக்கிறேன் எதற்கு இந்த சோகம்? எழுத வரவில்லை எதுவும்! திரும்ப யோசிக்கிறேன் யாரைக் குறை சொல்லலாம்? யார் யாரோ உன்னை சோகப்படுத்தினார்களோ? கேட்டுக் கொண்டேன் பதில் கிடைக்காமல்! சில நேரங்களில் சில மனிதர்கள் நினைத்துக் கொண்டேன்! பேனா எழுதியது 'வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகுமாம்' காகிதத்தின் ஈரம் காய்ந்திருந்தது!!

சரியும் தவறும்!!

சரியும் தவறும் சரியுமாய் தவறுமாயே தெரிவதில்லை எல்லாருக்கும் !! எனக்கு இக்கறை  பச்சை என்பேன் !! உனக்கு அக்கறை பச்சை என்பாய் !! நாளைக்கு நானும் அக்கறையே பச்சை எனலாம் !! பூனையை கடிச்ச நாய் தான் தப்பு பூனை நாயை சீண்டியது தெரியும் வரை !! மறைக்கப் பட்ட உண்மைகள் மறக்கப்படாமல் இருக்கும் வரை இன்று சரியாய் இருப்பது நாளை தவறாகலாம் ! இன்று தவறாக்கப்பட்டது நாளை சரியாகலாம் ! சரிக்கும் தவறுக்கும் உள்ள மயிரிழை அளவு இடைவெளியில் தான் பல உறவுகள் ஊசலாடி கொண்டிருகின்றன !! பிடித்து கொள்வோமா விழுந்து செல்வோமா  என  !! இவை யாவும் இறுதி வரை புரியாமல் கரைந்து போகும் புதிராயும் மறையலாம் !!

முகமூடி விலை குறைவா?

முன் சிரித்துப் பின் பதுங்கும் முகமூடி மனிதர்கள் பல பேரை காண்கிறேன் நான்! நண்பனாம் தோழியாம் சொல்லி சொல்லி மகிழ்கிறார் அழ ஒரு தோள் வேண்டும் சொல்லாமல் மறைகிறார்! கூடத்தான் நடந்தார்கள் இக்காட்டுவழி பாதை தனில் கண் முழித்துத் தேடிப்பார்த்தேன் கானல் போன்ற கனவுலகில்! விளிக்கிறேன் விழிக்கிறேன் பின்பு ஒருக்களித்து படுக்கிறேன் முகமூடி விலை வெகு குறைவு போலும் என்றெண்ணியபடி! என் வசமும் ஒன்றிருந்ததைத்தான் முறறிலும் மறந்திருந்தேன்!

உரக்க எழுதுவேனா

பேனா மையின் கடைசி துளியால் எனது கதைப் புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் நான் எழுதிய உனது பெயர் உரக்க ஒலிக்கவில்லையா? அது பார்த்திருக்கப்படவேண்டியது! நமது கதையின் பிள்ளையார்சுழி! நீயோ பாராமலே போய்விட்டிருந்தாய்!! நான் எழுத விரும்புகிறேன், முதல் பக்கத்திலிருந்து! நான் நீ நாம் என்ற கதையை! முடிவிலாப் பக்கங்களைக் கொண்ட புதிய புத்தகத்தில்! இம்முறை உரக்க எழுதுவேனா?!

இரு தலைக் கொள்ளி எறும்பு !!

இரண்டில் ஒன்று தொடு - என்று விளையாடி வென்று முடிவெடு  என்றார் சிறுபிள்ளைத்தனமாக !!  ஒன்று தன் மகிழ்ச்சி!!  மற்றொன்று அடுத்தவர்  மகிழ்ச்சி !!  இரண்டுமே மிகத் தேவை! ஆனால்  கொடுக்கப்பட்டது ஒரு வாய்ப்பு !! இப்படித் தான் தவிக்குமோ  இரு தலைக் கொள்ளி எறும்பு ??!!