மௌனமே மொழி ஆதல்!
கருவாய் உதித்து காலால் உதைத்து உருண்டு பிரண்டு வெளியில் வரும்வரை அவளுக்கும் எனக்கும் நடந்த உணர்வு பரிமாற்றங்கள் ! திடீரென கண்ணுக்குள் ஏதோ வெள்ளை பந்து போல் பாய்ந்து வந்தது முதல் முறையாக அழுகிறேன் ! உள்ளிருந்த போதும் அழுதேனோ ?! மௌனம் ! வெதுமையாய் வெள்ளை துணிக்குள் அவள் பக்கத்தில் கிடக்கிறேன் மௌனமாய்! கண்களில் சிறு துளி கண்ணீரோடு மௌனமாய் தடவி விடுகிறாள் ! என் ஒவ்வொரு அசைவையும் புரிந்து நிகழ்கிறாள்! ஸ்பரிசிக்கிறாள்! சுவாசிக்கிறாள் ! அவளை சுற்றி விழுந்த ஆயிரம் வார்த்தைகளையும் வெல்ல கூடியதாய் உள்ளது எந்தன் மௌன மொழி!