குடியரசு தின வாழ்த்துக்கள்!!
ஆஹா நாளை குடியரசு தினம் ! எல்லாருக்கும் மனதில் தோன்றுவது விடுமுறை நாளைக்கு ! ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கவலை ! எப்படி நாளைக்கு பொழுத போக்குவது ! ஒருவன் படம் பாக்க போலாம் என்கிறான் ! இன்னொருத்தி ஷாப்பிங் போகலாம் என்கிறாள் ! எல்லாரும் மறக்காமல் குறுஞ்செய்தி அனுப்பி கொள்கிறார்கள் ! குடியரசு தின வாழ்த்துக்கள் என்று ! ஒருவரேனும் இத்தினத்தின் சிறப்பை உணர்கிறார்களா ?!! நாம் ஆள வேண்டிய நாட்டை அரசியல் என்னும் சாக்கடையை நிரப்பி ஓரமாய் நின்று வேடிக்கை பார்த்து கொண்டே வாழ்த்துக்கள் சொல்லி கொள்கிறோம் நம் நாடு குடியரசு என்று ! வெளி நாட்டு கம்பெனி-கு வேலை முடிக்க மூளையை கசக்கி பிழிகிறோமே! தேர்தலில் வாக்களிக்கும் போது சிந்திப்போம் ! கேள்வி கேப்போம் ! லஞ்சம் ஒழிப்போம்! தலைவா என்று ஆளுபவர் காலடியில் விழுந்து கிடக்க வேண்டாம் ! அத்தலைவன் மனதில் பயம் உண்டாக்குவோம் ! நாம் ஆளும் நாடிது என்று நிமிர்ந்து நிற்போம் ! ...