விழுந்தேன் ! எழுந்திட வியந்தேன் !
நேற்று பார்த்த படமொன்றில் கத்தியை உள் வாங்கியபடியே உயிரை வெளியே விட்டு கொண்டிருந்த தம்பியை திரும்ப அழைக்க போராடிய அண்ணனை பார்த்த போது இறப்பு என்னை பயமுறுத்தியது ! அறுந்து போன செருப்பு பேருந்து நிறுத்தத்தில் செருப்பு தைப்பர்! அந்த தள்ளாத வயதில் நிழலில்லாத மரத்தடியில் அவர் செருப்பை குத்திய போது முதுமை என்னை ஈட்டி போல் தாக்கியது ! தாக்குதல்களோடு போன நான் தோழிகளால் தாக்க பட்டேன்! அரசியலும் சினிமாவும் அறை பட அரை மணி நேரம் வேடிக்கை முடிந்து கிளம்பும் போதுதான் உணர்ந்தேன் தாக்குதல்கள் தாக்காமலே போயிருந்ததை ! உறவுகளை பொறுத்தே உள்ளம் ! உணர்வுகள் மதிக்கப்பட்டால் இறப்பும் சுலபமானது, நிழலில்லாத மரத்தடி உழைப்பும் இனிமையானதே !